என் மலர்
சினிமா

தம்பி நீ கலக்கீட்ட - சமந்தாவுக்கு அட்லி பாராட்டு
தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் வெளியாகி இருக்கும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், படத்தை பார்த்த அட்லி படக்குழுவை பாராட்டியிருக்கிறார். #NadigaiyarThilagam #KeerthySuresh
மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் இன்று வெளியாகி இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். சமந்தா பத்திரிகை நிருபராக நடித்திருக்கிறார்.
படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் அட்லியும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட் போட்டுள்ளார். அதில் அட்லி கூறியிருப்பதாவது,

உன்னதமான, உற்சாகமூட்டும், உயிர் காவியமான சாவித்ரி அம்மாவின் வாழ்க்கையை மீண்டும் உயிர் பெற வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக மாயாபசார் நடனம் மிகவும் அற்புதம். சமந்தா தம்பி நீ கலக்கிட்ட, படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். மறக்க முடியாத காவியத்தை வழங்கியதற்காக வைஜெயந்தி பிலிம்சுக்கு பாராட்டுக்கள்'
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வைஜெயந்தி மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்திருக்கிறார். தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வருகிற 11-ஆம் தேதி படம் ரிலீசாக இருக்கிறது. NadigaiyarThilagam #Mahanati #KeerthySuresh #Samantha
Next Story






