என் மலர்
சினிமா

துல்கர் சல்மான் ரசிகனாகி விட்டேன் - எஸ்.எஸ்.ராஜமவுலி பாராட்டு
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தின் தெலுங்கு பதிப்பை பார்த்த இயக்குநர் ராஜமவுலி, தான் துல்கர் சல்மான் ரசிகனாகி விட்டதாக கூறியிருக்கிறார். #NadigaiyarThilagam #KeerthySuresh
மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் இன்று வெளியாகி இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். சமந்தா பத்திரிகை நிருபராக நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், இன்று படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி படக்குழுவை வாழ்த்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில்,

`சாவித்திரியின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் இதுவரை பார்த்திராத வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் பழம்பெரும் நடிகையை மீண்டும் உயிர்பெற்று வர வைத்துள்ளார். துல்கர் சல்மான் அற்புதமாக நடித்துள்ளார். நான் அவரது ரசிகனாகிவிட்டேன். வாழ்த்துக்கள் நாக் அஸ்வின், ஸ்வப்னா, உங்களது நம்பிக்கை மற்றும் உறுதி தலைசிறந்தது'
இவ்வாறு கூறியிருக்கிறார்.
வைஜெயந்தி மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்திருக்கிறார். தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வருகிற 11-ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. NadigaiyarThilagam #Mahanati #KeerthySuresh
Next Story






