என் மலர்

  சினிமா

  இசை வெளியீட்டுக்கு முன்பாகவே விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் `மெர்சல் படக்குழு
  X

  இசை வெளியீட்டுக்கு முன்பாகவே விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் `மெர்சல்' படக்குழு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  `மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு முன்பாக விஜய் ரசிகர்களுக்கு மாஸான ட்ரீட் கொடுக்க `மெர்சல்' படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
  இந்த ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் விஜய்யின் `மெர்சல்' படமும் ஒன்று. அட்லி இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இப்படத்தில் தளபதி விஜய் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர்.

  இவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.  ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக `மெர்சல்' படத்தை தயாரித்து வருகிறது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வருகிற 20-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஆனால் அதற்கு முன்னதாகவே விஜய் ரசிகர்களுக்கு ஒரு மாஸ் ட்ரீட் கொடுக்க மெர்சல் படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதன்படி படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று இசை வெளியீட்டு முன்பாக, விரைவில் வெளியாக இருப்பதாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமா ருக்மணி அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

  அந்த பாடல் விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Next Story
  ×