என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள ரியோவுக்கு ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படக்குழு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளார்களாம்.
ரியோ ஹீரோவாக நடித்துள்ள படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இப்படத்தை பானா காத்தாடி புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், தங்கதுரை ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ‘பிளான் பண்ணி பண்ணா’ என்கிற பாடலை இன்று பிக்பாஸ் வீட்டில் வெளியிட உள்ளனர். இப்படத்தின் நாயகன் ரியோவும் பிக்பாஸ் வீட்டில் இருப்பதால் படத்தின் புரமோஷனுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என கருதி அங்கு வெளியிடுகின்றனர். படக்குழுவினரின் இந்த முடிவு ரியோவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த பாடலை பிரேம்ஜி பாடியுள்ளார்.
பிரபல வில்லன் நடிகரான சோனு சூட், இனிமேல் அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்கப்போவதில்லை என முடிவு செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் கொடூரமான வில்லனாக நடித்து வந்தவர் சோனுசூட். கொரோனா லாக்டவுன் போடப்பட்டதில் இருந்து ஏழை மக்களுக்காக இவர் செய்த உதவிகள் ஏராளம். அந்த உதவிகள் அனைத்தையும் தனது சொந்த செலவில் செய்த சோனு சூட், மக்கள் மத்தியில் ரியல் ஹீரோவாக மாறினார்.
மக்கள் மத்தியில் தற்போது அவரது இமேஜ் மாறிவிட்டதால், படங்களில் அவருக்கு வில்லன் கதாபாத்திரங்கள் கொடுப்பதை இயக்குனர்கள் தவிர்த்து வருகிறார்களாம்.

அதன்படி கொரோனா லாக்டவுனுக்கு முன் தெலுங்கில் அவர் வில்லனாக நடித்துவந்த 'அல்லுடு அதுர்ஷ்' என்ற படத்தில் சோனு சூட்டின் கதாபாத்திரத்தை முற்றிலும் மாற்றி விட்டார்களாம். தற்போது அவருக்காக புதிய கதையை உருவாக்கி உள்ளார்களாம்.
சோனு சூட்டும் இனி வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடிக்க போவதில்லை என முடிவெடுத்து விட்டாராம். பாசிட்டிவான கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க உள்ளாராம்.
நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு சினிமா பிரபலம் ஒருவர் புது வீடு பரிசாக கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக வந்த ரகுல் பிரீத் சிங் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களில் நடிக்கிறார்.
சமீபத்தில் போதை பொருள் வழக்கில் போலீசார் சம்மன் அனுப்பி ரகுல்பிரீத் சிங்கை விசாரித்தது பரபரப்பானது. ரகுல் பிரீத் சிங் ஐதராபாத்தில் புதிதாக வீடு வாங்கி குடியேறி இருக்கிறார். இந்த வீட்டை ஆந்திராவைச் சேர்ந்த சினிமா பிரபலம் பரிசாக அவருக்கு கொடுத்ததாக கிசுகிசுக்கள் வந்தன.

நடிகை சமந்தா ஓ.டி.டி. தளத்துக்காக நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ரகுல் பிரீத் சிங் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “நான் வதந்திகள் மற்றும் கிசுகிசுக்களை பொருட்படுத்துவது இல்லை. ஐதராபாத்தில் நான் வசிக்கும் வீட்டை ஒரு பிரபலம் எனக்கு பரிசாக கொடுத்ததாக தொடர்ந்து வதந்திகள் வருகின்றன. இது பெரிய அபத்தம். வீட்டை யாராவது பரிசாக கொடுப்பார்களா?. நான்தான் அந்த வீட்டை வாங்கினேன். மற்றவர்கள் என்னை பராமரிக்கும் நிலையில் நான் இல்லை” என்றார்.
திறமைக்கு வாய்ப்பளிப்பதில் தமிழ் சினிமா தான் முதலிடத்தில் இருப்பதாக மலையாள நடிகர் தாமஸ் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
மோகன்லால், மம்மூட்டி, ஜெயராம், முகேஷ் என மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் தாமஸ் ஆண்டனி, ‘கடத்தல் காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
இவர் தமிழ் சினிமா பற்றி கூறியதாவது: தமிழ் சினிமாவும் தமிழகமும் எனக்கு மிகவும் பிடிக்கும். திறமையானவர்களுக்கு வாய்ப்பளிப்பதில் தமிழ் சினிமாவுக்கு தான் முதலிடம். பல வருடங்களாக மலையாள சினிமாவில் இருக்கிறேன். ஆனால், அங்கு எனது திறமைக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதே தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே என் நடிப்பை வெளிக்காட்டும் மிகப்பெரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தான் தமிழ் சினிமா. இங்கு திறமைக்கு வாய்ப்பும், மரியாதையும் கிடைக்கும். தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பேன்.

தமிழ் சினிமா இயக்குநர்கள் அனைவரும் திறமையானவர்கள். கமர்ஷியல் படங்களில் கூட நல்ல மெசேஜ் சொல்லக்கூடியவர்கள்.
அதனால் அனைத்து இயக்குநர்களின் படங்களையும் விரும்பி பார்ப்பேன்.
தற்போது இயக்குநர் வெற்றிமாறன், பா.இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் போன்றவர்களின் படங்களை அதிகமாக பார்க்கிறேன். அவர்களுடைய படங்களில் சிறு வேடம் என்றால் கூட நடிக்க தயாராக இருக்கிறேன். என நடிகர் தாமஸ் ஆண்டனி கூறினார்.
நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த வெப் தொடர் இயக்குனர் ரஞ்சித் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் வசிப்பவர் ரஞ்சித் (வயது 25). இவரது சொந்த ஊர் உடுமலைப்பேட்டை ஆகும். இவர், வெப் தொடர்களை இயக்கி வருகிறார். இவரது தொடரில் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த நடிகை சுவேதா (21) நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சுவேதா, அடையாறு துணை கமிஷனர் விக்ரமனிடம் புகார் மனு அளித்தார். அதில் அவர், வெப் தொடர் இயக்குனர் ரஞ்சித் மற்றும் அவரது உதவியாளர்கள் என்னை காதலிக்க சொல்லியும், பாலியல் தொல்லையும் கொடுத்து வருவதாக கூறி இருந்தார்.
இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கானத்தூர் போலீசாருக்கு துணை கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் கானத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
அதில் நடிகைக்கு, இயக்குனர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். நடிகையை காதலிக்க சொல்லி தொல்லை கொடுத்த அவரது உதவியாளர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவை போன்று தோற்றமுடைய பெண்ணின் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டது ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் மற்றும் ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே சித்ராவை போன்றே தோற்றம் கொண்ட பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் பெயர் கீர்த்தனா தினகர்.
சித்ரா போலவே போட்டோ ஷூட் நடத்தியதன் பின்னணி குறித்து கீர்த்தனா தினகர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது: "இத்தனை வருடங்களாக, நான் எங்குச் சென்றாலும், என்னைப் பார்ப்பவர்கள் முதலில் சொல்வது, நீங்கள் சித்து/முல்லை/சின்ன பாப்பா பெரிய பாப்பா நடிகையைப் போல இருக்கிறீர்கள்' என்பதுதான். உண்மையில், எனக்கு அந்த மாதிரியான கருத்துகள் சந்தோஷத்தை கொடுக்காது.

ஏனெனில் நான் அசலாகத் தோன்ற வேண்டும் என்று நினைப்பவள். ஆனால் இப்போது அதே கருத்தைச் சொன்னால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் என்னால் ஒருவரைச் சந்தோஷப்படுத்த முடிகிறது என்ற காரணம் தான்.
அவர் மறைந்த தருணத்திலிருந்து, என் நண்பர்களும், நெருங்கியவர்களும் அந்த சீரியல் குழுவை தொடர்பு கொள், அந்தக் கதாபாத்திரத்தின் தேர்வுக்கு சென்று வா, கண்டிப்பாக உன்னைத் தேர்வு செய்வார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்.
முதலில் அதைக் கேட்ட போது கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் இப்போது வரை அதே போன்ற குறுஞ்செய்திகள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன.

முல்லைக்கும் சித்துவுக்கும் மாற்றே கிடையாது. நாம் அவரை மிகவும் நேசித்துள்ளோம். இப்போது அந்தக் கதாபாத்திரத்தில் அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை தேர்வு செய்திருப்பார்கள். நாங்கள் சித்ராவுக்கு மரியாதையும், அன்பும் செலுத்தும் விதமாகத்தான் இந்த போட்டோ ஷூட்டை எடுத்தோம்.
எங்களைப் போன்றே சித்ராவை விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் புகைப்படங்களைப் பார்ப்பது மகிழ்ச்சியைத் தரும் என்று நம்புகிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றாமல் கூட்டமாக கூடி நின்ற படக்குழுவினரை டாம் குரூஸ் கடுமையாக திட்டி உள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளோடு சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தற்போது மிஷன் இம்பாஸிபில் 7 படத்தில் நடித்து வருகிறார். லண்டனில் தனி கிராமத்தை உருவாக்கி இதன் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்ற சிலர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக கூடி நின்றனர். அதை பார்த்த டாம் குரூஸ் ஆவேசமானார். அவர்களை கடுமையாக திட்டினார். அந்த ஆடியோ தற்போது கசிந்து வைரலாகி வருகிறது.

அதில், “கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் படப்பிடிப்பில் இருந்து விரட்டப்படுவார்கள். சினிமா துறை முடங்கியதால் வேலை இழந்து இருப்பவர்களிடம் பேசி பாருங்கள். அப்போது கஷ்டம் புரியும். சாப்பாடு இல்லாமல் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
தினமும் தூங்க போகும்போது அதை நினைத்து பார்க்கிறேன். உங்கள் அஜாக்கிரதையால் படப்பிடிப்பை நிறுத்த முடியாது. படப்பிடிப்பு தளத்தில் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்” என்று பேசி உள்ளார். கொரோனா விதிமுறையை கடைப்பிடிக்காத 5 பேர் படப்பிடிப்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
‘காதல்’ படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்துள்ள படத்தின் நாயகன் பரத், டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் ஷங்கர் தயாரித்த முதல் படம் காதல். கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பாலாஜி சக்திவேல் இயக்கி இருந்த இப்படத்தில் பரத், சந்தியா இருவரும் காதல் ஜோடிகளாக நடித்திருந்தனர். இப்படத்தில் இவர்களது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. குறிப்பாக அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்து படத்தின் நாயகன் பரத், டுவிட்டரில், “16 வருடங்களுக்கு முன்பு. டிசம்பர் 17, 2004 எனது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிய நாள். எனது திரையுலக பயணத்தில் ‘காதல்’ ஒரு மைல்கல். ஐஸ்வர்யா மற்றும் முருகன் அப்போதும், இப்போதும்” எனக் குறிப்பிட்டு, சமீபத்தில் சந்தியாவை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை பரத் பகிர்ந்துள்ளார்.
டி.வி. நடிகை சித்ரா விவகாரத்தில் கணவர் ஹேம்நாத்திடம் 8 மணி நேரம் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை மேற்கொண்டார்.
டி.வி. நடிகை சித்ரா செம்பரம்பாக்கம் அருகே உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார் கைது செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
ஹேம்நாத்தை விசாரணைக்காக ஆஜர்படுத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ பொன்னேரி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். நேற்று காலை 8.20 மணிக்கு ஹேம்நாத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். சித்ரா தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ சித்ராவின் தாய், தந்தை மற்றும் ஹேம்நாத்தின் தாய், தந்தை ஆகியோரிடம் விசாரணை நடத்திய நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நேற்று விசாரணை நடத்தினார். 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து ஹேம்நாத் தகுந்த பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்.
நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் ஆர்.டி.ஓ விசாரணை முடிந்த பின் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
விசாரணை ஒரு பக்கமாகவே நடைபெறுவதாக தெரிகிறது. சித்ராவின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரணை நடைபெற்றதாக தெரியவில்லை. என் மகனிடம் 6 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் 7-வது நாள் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு முன்பு அவசர அவசரமாக கைது செய்யப்பட்டார்.
சித்ராவின் செல்போன் தகவல்களை முறையாக ஆராய்ந்து, அதில் கிடைக்கும் உண்மை தகவல்களை ஆராய வேண்டும். சித்ராவுக்கு ஏதோ ஒரு வகையில் பெரிய மன அழுத்தம் இருந்துள்ளது. ஏனென்றால் சித்ரா தற்கொலை செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, தன் வீட்டின் மீது தான் வாங்கிய கடன் தொகையை செலுத்த பணம் தரும்படி என்னிடம் கூறியபோது நான் சம்மதம் தெரிவித்தேன். ஆகையால் ஏதேனும் பொருளாதார பிரச்சினையில் அவர் சிக்கினாரா? இல்லை அது சம்பந்தமாக யாரேனும் மிரட்டினார்களா என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹேம்நாத்தின் வக்கீல் விஜயகுமார் கூறுகையில்:-
தனிப்பட்ட இருவரின் சண்டையால் இந்த தற்கொலை நடைபெறவில்லை. இது ஒரு பிரபலத்தின் தற்கொலை என்பதை நினைவில் வைத்து விசாரணை நடத்த வேண்டும். சித்ரா கார் வாங்கியுள்ளார். புதிதாக வீடு கட்டியுள்ளார். இதனால் பொருளாதார ரீதியாக பிரச்சினை வந்து இருக்கலாம். அது குறித்த விசாரணையையும் நடத்த வேண்டும். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹேம்நாத்தை விசாரணைக்காக ஆஜர்படுத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ பொன்னேரி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். நேற்று காலை 8.20 மணிக்கு ஹேம்நாத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். சித்ரா தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ சித்ராவின் தாய், தந்தை மற்றும் ஹேம்நாத்தின் தாய், தந்தை ஆகியோரிடம் விசாரணை நடத்திய நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நேற்று விசாரணை நடத்தினார். 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து ஹேம்நாத் தகுந்த பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்.
நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் ஆர்.டி.ஓ விசாரணை முடிந்த பின் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
விசாரணை ஒரு பக்கமாகவே நடைபெறுவதாக தெரிகிறது. சித்ராவின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரணை நடைபெற்றதாக தெரியவில்லை. என் மகனிடம் 6 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் 7-வது நாள் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு முன்பு அவசர அவசரமாக கைது செய்யப்பட்டார்.
சித்ராவின் செல்போன் தகவல்களை முறையாக ஆராய்ந்து, அதில் கிடைக்கும் உண்மை தகவல்களை ஆராய வேண்டும். சித்ராவுக்கு ஏதோ ஒரு வகையில் பெரிய மன அழுத்தம் இருந்துள்ளது. ஏனென்றால் சித்ரா தற்கொலை செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, தன் வீட்டின் மீது தான் வாங்கிய கடன் தொகையை செலுத்த பணம் தரும்படி என்னிடம் கூறியபோது நான் சம்மதம் தெரிவித்தேன். ஆகையால் ஏதேனும் பொருளாதார பிரச்சினையில் அவர் சிக்கினாரா? இல்லை அது சம்பந்தமாக யாரேனும் மிரட்டினார்களா என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹேம்நாத்தின் வக்கீல் விஜயகுமார் கூறுகையில்:-
தனிப்பட்ட இருவரின் சண்டையால் இந்த தற்கொலை நடைபெறவில்லை. இது ஒரு பிரபலத்தின் தற்கொலை என்பதை நினைவில் வைத்து விசாரணை நடத்த வேண்டும். சித்ரா கார் வாங்கியுள்ளார். புதிதாக வீடு கட்டியுள்ளார். இதனால் பொருளாதார ரீதியாக பிரச்சினை வந்து இருக்கலாம். அது குறித்த விசாரணையையும் நடத்த வேண்டும். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், அடுத்ததாக ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் நடிக்க உள்ளார்.
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் தனுஷ். தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் இவர், கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து அமிதாப் பச்சனுடன் ஷமிதாப் படத்தில் நடித்தார்.
பின்னர் மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்த தனுஷ், கடந்த 2018-ம் ஆண்டு ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ என்ற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். இப்படம் மூலம் அவர் உலகளவில் பிரபலமானார்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் மற்றும் எண்ட் கேம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்கள் அந்தோனி மற்றும் ஜோ ரூசோ தற்போது ‘தி கிரே மேன்’ என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு, அதே பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்குகின்றனர்.
இந்த படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் போன்ற ஹாலிவுட் நடிகர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் தனுஷும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக, இப்படத்தை தயாரிக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்துக்கு தணிக்கை குழு ‘யூ’ சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் மாதமே திரைக்கு வர தயாரான நிலையில் கொரோனாவால் நின்று போனது. மாஸ்டர் படத்தை நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
இருப்பினும் தியேட்டர் அதிபர்கள் வற்புறுத்தலால் ஓ.டி.டி. முடிவை கைவிட்டு பொங்கலுக்கு தியேட்டர்களில் திரையிட தயாராவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யூ ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்துக்கு தணிக்கையில் ‘யூ’ சான்றிதழ் கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் சண்டை காட்சிகள் அதிகமாக இருப்பதை காரணம் காட்டி ‘யூ ஏ’ சான்றிதழ் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.
பட அதிபர் ஜீவி தயாரித்த "கை கொடுக்கும் கை'' படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை விஜயகுமார் கவனித்துக் கொண்டார். அப்போது படத்தின் "கிளைமாக்ஸ்'' குறித்து, அவருக்கும் படத்தின் டைரக்டர் மகேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது.
பட அதிபர் ஜீவி தயாரித்த "கை கொடுக்கும் கை'' படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை விஜயகுமார் கவனித்துக் கொண்டார். அப்போது படத்தின் "கிளைமாக்ஸ்'' குறித்து, அவருக்கும் படத்தின் டைரக்டர் மகேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது.
விஜயகுமார் ஏற்கனவே சிவாஜியை வைத்து "நெஞ்சங்கள்'' என்ற படத்தை தயாரித்தார். வசூல் ரீதியாக அந்தப்படம் வெற்றி பெறாததால், தொடர்ந்து படம் தயாரிக்கும் எண்ணத்தை விட்டுவிட்டார்.
ஆனால், பட அதிபர் ஜீவி கேட்டுக்கொண்டதால், "தயாரிப்பு மேற்பார்வை'' என்ற பொறுப்பை ஏற்க நேரிட்டது.
இதுகுறித்து விஜயகுமார் கூறியதாவது:-
"சொந்தப்படம் எடுத்த அனுபவம், எனக்கு நிச்சயம் புதிய அனுபவம். இனி தயாரிப்பே வேண்டாம் என்கிற அளவுக்கு இந்த தயாரிப்பு அனுபவம் என்னை பாதித்திருந்தது.
தொடர்ந்து 4 வருடம் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் ஜீவி என்னை அழைத்துப்பேசினார். "ஒரு கன்னடப்படம் வந்திருக்கிறது. வித்தியாசமான கதையமைப்புடன் நன்றாகவே இருக்கிறது. தமிழில் ரஜினியை வைத்து அதை தயாரிக்க இருக்கிறேன்'' என்றார்.
ரஜினி அப்போது சூப்பர் ஸ்டார் ஆகயிருந்த நேரம். அதோடு வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டிவந்தார். எனவே, ரஜினி அந்தப் படத்தில் நடிப்பது குறித்து ஜீவியிடம் என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.
"உங்களுக்கு இந்தப் படத்தில் வேலை இருக்கிறது. தயாரிப்பாளராக நான் இருந்தாலும், நீங்கள்தான் முன்னிலை தயாரிப்பு மேற்பார்வை செய்யவேண்டும்'' என்றார், ஜீவி.
அவர் அப்படிச் சொன்ன பிறகு, எனக்கு மறுக்கத் தோன்றவில்லை.
படத்தில் ரஜினி ஜோடியாக பார்வையற்ற பெண் கேரக்டரில் ரேவதி நடித்தார். மகேந்திரன் டைரக்ட் செய்தார்.
திட்டமிட்டபடி, படம் வளர்ந்து வந்தது. கிளைமாக்ஸ் காட்சியின்போதுதான் எனக்கும் டைரக்டர் மகேந்திரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பார்வையற்ற பெண்ணுக்கு ரஜினி வாழ்வு கொடுக்கிறார். அந்தப் பெண் ரஜினியை மணந்து கொண்ட நேரத்தில் அந்த ஊர் பண்ணையாரால் அவள் கற்பு பறிபோகிறது. இதை தெரிந்து கொண்ட ரஜினி பெருந்தன்மையுடன் "உன் மீது எந்த தவறும் இல்லை. நடந்ததை ஒரு விபத்தாக கருதி மறப்போம்'' என்று சொல்லி மனைவி ரேவதியுடன் வேறு ஊருக்கு புறப்பட்டுப் போகிற மாதிரி படம் முடியும்.
பொதுவாகவே ரஜினி மாதிரி `இமேஜ் வேல்ï' உள்ள நடிகர்கள் படங்களில், ஜோடியாக வருபவர்களுக்கு எந்த மாதிரியான துன்பம் என்றாலும் உயிரைப் பணயம் வைத்தாவது ஹீரோ காப்பாற்றி விடுவார். அதைத்தான் ரசிகர்களும் விரும்புவார்கள். "ரஜினியின் மனைவியாக நடிக்கும் ரேவதியின் கற்பு பறிபோகிற மாதிரியான காட்சியை ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள். எனவே கிளைமாக்சை மாற்றுங்கள்'' என்று மகேந்திரனிடம் சொன்னேன்.
அவரோ, "ஒரிஜினல் கதையில் இப்படித்தான் இருக்கிறது. நமது ரசிகர்கள் புதுமை விரும்பிகள். அதனால் கிளைமாக்சை மாற்ற அவசியமில்லை'' என்றார்.
அப்படியும் நான் விடவில்லை. முதல் இரவில் அந்த பார்வையில்லாத பெண் கணவனிடம் என்ன சொல்கிறாள்? "நான் உங்களுக்கு முன்னாடியே பூவும் பொட்டுமா போயிடணும்னு ஆசைப்படுகிறேன்'' என்கிறாள். பதறிப்போகும் கணவனை கையமர்த்தி, "அப்படி நான் செத்துப்போகும்போது நீங்கதான் என்னை குளிப்பாட்டி புடவை கட்டி விடணும். அதாவது ஒரு பெண் கூட என் உடம்பை பார்க்கக் கூடாது. கணவனா நீங்களே அந்தக் கடமையையும் செய்துடணும்'' என்கிறார்.
இப்படி இன்னொரு பெண்கூட தனது உடம்பை பார்த்து விடக்கூடாது என்று சொல்லும் அவள், வேறொரு ஆண் மகனால் சிதைக்கப்படுவது அந்த கேரக்டரின் தன்மையையே சின்னா பின்னப்படுத்துவது போல் ஆகிவிடாதா? எனவே கிளைமாக்சை ரஜினி கேரக்டரின் தன்மைக்கு பாதிப்பு நேராமல் நாயகியின் விருப்பமும் பூர்த்தியாகிற மாதிரி மாற்றிப் பாருங்கள்'' என்றேன்.
இதற்கிடையே நான் கிளைமாக்சை மாற்றச் சொன்ன விஷயம், ரஜினிக்கும் தெரியவந்தது. அதுபற்றி என்னிடம் பேசிய ரஜினி, "விஜய்! நீங்க சொன்ன கிளைமாக்சையும் எடுத்துவிடுவோம்'' என்றார், ஆர்வமாக.
ஆனால், அதற்குள் ஏற்கனவே எடுத்த கிளைமாக்சுடனேயே படம் தயாராகி விட்டது. அந்த முடிவுடன்தான் படம் ரிலீஸ் ஆகியது.
ரஜினியின் ரசிகர்களால் படத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதற்குப் பிறகு படத்தயாரிப்பு பக்கம் என் பார்வை போகவில்லை.''
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.






