என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பஹ்ரைன் சென்றுள்ள விஷால் பட நடிகை, அங்குள்ள வீதிகளில் ‘ஹார்லி டேவிட்சன்’ பைக் ஓட்டிய வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘சிவப்பதிகாரம்’. கரு பழனியப்பன் இயக்கிய இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை மம்தா மோகன்தாஸ். இதையடுத்து மலையாளத்தில் பிசியான அவர், தற்போது 15 ஆண்டுகளுக்கு பின் விஷாலுடன் மீண்டும் இணைந்து எனிமி படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், பஹ்ரைன் சென்றுள்ள நடிகை மம்தா, அங்குள்ள வீதிகளில் ‘ஹார்லி டேவிட்சன்’ பைக் ஓட்டிய வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    மம்தா மோகன்தாஸ்

    இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: “நமக்கே பைக் ஓட்ட தெரியும்போது ஏன் மற்றவருக்காக நாம் காத்திருக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு பின் பைக் ஓட்டி இருக்கிறேன். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், எனக்கு இன்னும் அந்த டச் விட்டுப்போகவில்லை” என பதிவிட்டுள்ளார்.


    யுவன் சங்கர் ராஜாவின் மதம் சம்பந்தப்பட்ட பதிவால் சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், அதற்கு அவர் சமூக வலைதளம் வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார்.
    பேஸ்புக்கில் 20 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அவர் நேற்று, குரான் வசனம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், யுவன் சங்கர் ராஜா, இந்தப் பதிவின் வாயிலாக மதப் பிரச்சாரம் செய்வதாக கமெண்ட் செய்திருந்தார். 

    அந்த ரசிகர் போட்ட கமெண்டில், “நான் உங்களை விரும்பியதும், பின்தொடர்வதும் நீங்கள் யுவன் சங்கர் ராஜாவாக பிறந்ததால் தான். மதத்தை பரப்பும் தளம் இது இல்லை. இப்படியே தொடர்ந்தால் உங்கள் பக்கத்திலிருந்து வெளியேறிவிடுவேன்” என்று சொல்லி இருந்தார். இதற்கு யுவன்சங்கர் ராஜா, வெளியேறிவிடுங்கள் என்று பதிலடி கொடுத்தார்.

    மேலும், சிலர் ஒருபடி மேலே சென்று நீங்கள் பதிவிட்டிருக்கும் கருத்தை பகவத் கீதையில், நீங்கள் காணவில்லையா எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர். 

    இதற்கு பதிலளித்த யுவன், “நான் நம்பும் ஒரு மதம் குறித்துப் பதிவிடுவது எப்படி இன்னொரு மதத்தை மதிக்காமல் போவது ஆகும், திரைப்பிரபலங்களும் தனிமனிதர்களே, அவர்களுக்கும் உரிமைகள் உள்ளன, என் நம்பிக்கை என் உரிமை” என பதிவிட்டிருந்தார்.

    யுவன் சங்கர் ராஜா

    மற்றொரு நபர் “புதிய மதத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் நீங்கள் இன்னும் ஏன் பழைய பெயரையே பயன்படுத்துகிறீர்கள். உங்கள் பெயரை மாற்றுங்கள்” என்று கமெண்ட் செய்ய, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக யுவன் பதிவிட்டதாவது, “நான் உங்களுக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஒரு இந்தியன். நான் ஒரு தமிழன். நான் ஒரு இஸ்லாமியன். இஸ்லாமியர்கள் அரேபிய நாடுகளில் மட்டும் தான் இருக்கிறார்கள் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை. 

    மதமும் இனமும் வெவ்வேறானவை. தேசியமும் மதமும் வெவ்வேறானவை. இந்த அடிப்படை விஷயம் கூட உங்களுக்கு புரியவில்லை என்றால் எதுவும் புரியாது. வெறுப்பு பிரசாரத்தை நிறுத்துங்கள். உங்கள் மீது அமைதி நிலவட்டும்” என்று தெரிவித்துள்ளார். 

    யுவன் சங்கர் ராஜாவின் இந்தப் பதிவும், கமெண்ட்டுகளும், விளக்கங்களும் தற்போது ஸ்கிரீன்ஷாட்டுகளாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
    மணிரத்னம் இயக்கிய படங்களை வரிசையாக ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    இயக்குனர் மணிரத்னம் தமிழில் ‘பகல் நிலவு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் ‘மௌன ராகம்’, ‘நாயகன்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘தளபதி’, ‘ரோஜா’, ‘பம்பாய்’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.  

    இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 26 படங்கள் டிஜிட்டலில் மாற்றப்பட உள்ளதாம். இதற்கான பணிகள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த 26 படங்களும் டிஜிட்டலில் மாற்றப்பட்ட பின் வரிசையாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    மணிரத்னம்

    இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தில், கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
    கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடி கேரள போலீசார் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்ற விழிப்புணர்வு பிரசாரங்களை மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. 

    அந்த வகையில், கேரள மாநில போலீசார் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில் சமீபத்தில் வெளியாகி வைரலான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலை கொரோனா விழிப்புணர்வுக்காக பயன்படுத்தி உள்ளனர். இந்த பாடலுக்கு போலீசார் மாஸ்க் அணிந்தபடி நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். 

    கேரளா போலீஸ்

    கேரள போலீசாரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன், “கேரளா போலீஸ் வழி, எப்போதும் தனி வழி. எப்படியாவது விழிப்புணர்வு ஏற்படுத்தினால் சரி” என குறிப்பிட்டுள்ளார்.


    கர்ணன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மலையாள நடிகை ரஜிஷா விஜயனுக்கு, தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
    மலையாள நடிகையான ரஜிஷா விஜயன், தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றிபெற்ற ‘கர்ணன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் அவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவர் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகை ரஜிஷா விஜயன், அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல், அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில், நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தான் ரஜிஷா ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். ஆனால் அவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

    ரஜிஷா விஜயன்

    இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளதாம். இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வக்கீல் வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    பாலசந்தர் இயக்கிய "மரோசரித்ரா'' (தெலுங்குப்படம்) சென்னையில் 596 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
    கமலஹாசனும், சரிதாவும் ஜோடியாக நடித்த படம் இது.

    "மூன்று முடிச்சு'' படத்துக்குப்பிறகு, பாலசந்தரின் "அவர்கள்'', "நினைத்தாலே இனிக்கும்'' ஆகிய படங்களில் கமலஹாசனும், ரஜினிகாந்தும் சேர்ந்து நடித்தார்கள்.

    "அவர்கள்'' படத்தில் கமல், ரஜினியுடன் சுஜாதா நடித்தார். "பேசும் பொம்மை'' ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்தது!

    படம் நன்றாக இருந்தும், சரியாக ஓடவில்லை. தன்னுடைய சிறந்த படம் ஓடவில்லையே என்பதில் பாலசந்தருக்கு வருத்தம் உண்டு.

    ஸ்ரீதரின் "இளமை ஊஞ்சலாடுகிறது'', பாரதிராஜாவின் "16 வயதினிலே'' ஆகிய படங்களிலும் கமலும், ரஜினியும் சேர்ந்து நடித்தனர்.

    இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்தார்கள். எனினும் இப்படி சேர்ந்து நடித்துக் கொண்டிருப்பதை விட, தனித்தனியாக நடித்தால்தான் இருவரும் முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியும் என்று நினைத்தார்கள். "இனி இருவரும் தனித்தனியாகவே நடிப்போம்'' என்று அறிவித்தார்கள்.

    அவர்கள் எண்ணியது போலவே, இருவரும் நடிப்பில் புதிய பரிமானங்களை வெளிப்படுத்தி, புதிய சிகரங்களைத் தொட்டார்கள்.

    பின்னர் பாலசந்தர் தயாரித்த பல படங்களில் தனித்தனியே நடித்தார்கள்.

    பாலசந்தர் டைரக்ட் செய்த படங்களிலேயே, மிக பிரமாண்டமான வெற்றிப்படம் "மரோசரித்ரா.''

    பாலசந்தரின் நெருங்கிய நண்பரான அரங்கண்ணல், 1978-ல் இதை தெலுங்கில் தயாரித்தார். கமலஹாசனும், சரிதாவும் ஜோடியாக நடித்தனர்.

    படத்தில் சரிதா தெலுங்குப்பெண். கமலஹாசன் தமிழ் இளைஞன். அவர்களுக்கிடையே ஏற்படும் காதலை அற்புதமாக சித்தரித்த படம் "மரோசரித்ரா.''

    கறுப்பு -வெள்ளையில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம், ஆந்திராவில் திரையிடப்பட்டு மகத்தான வெற்றி பெற்றது. இக்கதையை தமிழில் தயாரிக்க அரங்கண்ணல் யோசித்தபோது "தெலுங்குப்படத்தை அப்படியே தமிழ்நாட்டிலும் திரையிட்டுப் பார்ப்போமே'' என்று பாலசந்தர் கூறினார்.

    அதன்படி, சென்னை `சபையர்' தியேட்டரில் இப்படம் பகல் காட்சியாக திரையிடப்பட்டது. தமிழ் ரசிகர்களையும் இப்படம் வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக, இளைஞர்களும், இளம் பெண்களும் கூட்டம் கூட்டமாக `சபையர்' தியேட்டரை நோக்கிப் படையெடுத்தனர். தினமும் "ஹவுஸ்புல்'' காட்சியாகப் படம் ஓடியது.

    இப்போது 25 வாரம் ஓடினால், "வெள்ளி விழா'' என்று பெரிதாக விழா எடுக்கப்படுகிறது. "மரோசரித்ரா'' மொத்தம் 596 நாட்கள் ஓடியது. அதாவது ஒரு வருடமும் 231 நாட்களும்!

    பெங்களூரிலும் "மரோசரித்ரா'' 2 1/2 வருடம் ஓடி, சாதனை புரிந்தது.

    "மரோசரித்ரா''வை, "ஏக் து ஜே கேலியே'' என்ற பெயரில் எல்.வி.பிரசாத் இந்தியில் தயாரித்தார். அவரே பெரிய டைரக்டர். அப்படியிருந்தும், டைரக்ஷன் பொறுப்பை பாலசந்தரிடம் ஒப்படைத்தார்.

    இந்திப்பதிப்பில் கமலஹாசனும், ரதியும் ஜோடியாக நடித்தனர். படம் கலரில் தயாராகியது.

    "மரோசரித்ரா'' போலவே, "ஏக்துஜே கேலியே''வும், மாபெரும் வெற்றி பெற்றது. வடநாட்டில் இந்தப்படம் 80 வாரங்கள் ஓடியது.

    "மரோசரித்ரா'' பற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "மரோசரித்ராவின் கிளைமாக்ஸ் காட்சி (உச்சகட்டம்) ஒரு அற்புதமான விஷயம்.

    வில்லனிடம் சிக்கி, கதாநாயகி துடிதுடிப்பதாக வரும் காட்சி. அலையில் சிக்கிய புடவை, அங்கும் இங்கும் நீரில் வருவதை படமாக்கும்போது, குறிப்பிட்ட ஒரே பிரேமில் அந்தப்புடவை கேள்விக்குறி மாதிரி வந்தது. உடனே அதை கேமிராவில் படம் பிடித்தேன்.

    வில்லனிடம் சிக்கி கதாநாயகி புழுவாய்த் துடிக்கிறாள் என்பதை உணர்த்தும் விதத்தில், அக்காட்சி அமைந்ததுதான் அற்புதமான விஷயம்.

    "ஏக் துஜே கேலியே'' படப்பிடிப்பின்போதும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வழக்கமாக படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில், கடைசி நாள் படப்பிடிப்பு நடந்தது. கதாநாயகனும், கதாநாயகியும் உல்லாசமாக சுற்றித்திரிந்த அந்தப் பகுதியில், ஒரு பாறையில் இரண்டு பேர் பெயரும் எழுதப்பட்டிருக்கும்.

    அந்தப் பாறையின் உச்சியில், எழுத்துக்களுக்கு கொஞ்சம் மேலே கடைசி நாளன்று இரண்டு காக்கைகள் சோகமாக வந்து உட்கார்ந்ததை பார்த்தேன். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அதை எப்படியும் படம் பிடித்து காட்டிவிட வேண்டும் என்று துடித்தேன்.

    கேமராமேன் லோகு, அப்போது அங்கு இல்லை. உடனே அவருடைய உதவியாளரை கூப்பிட்டு, நானே அந்தக் காட்சியை படம் பிடித்தேன். படத்திலும் சேர்த்தேன்.

    சில நேரங்களில், நம்மையும் அறியாமல் சில சம்பவங்கள் நமக்காகவே நடக்கிற மாதிரி அமையும்போது, ரொம்ப எச்சரிக்கையாக இருந்து அதை படத்திலே சேர்த்து விடுவேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
    கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியிருக்கும் தள்ளிப்போகாதே படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
    இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளிப்போகாதே. இப்படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரேமம், கொடி போன்ற படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது.

    தள்ளிப்போகாதே பட போஸ்டர்

    இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடை பெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்திற்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    250 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்து வரும் நடிகை கோவை சரளா, சமீபத்தில் அளித்த பேட்டியில் திருமணம் பற்றி பேசி இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக வலம் வருபவர் கோவை சரளா. 15 வயதில் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது 59 வயது ஆகியும் தொடர்ந்து பல காமெடி வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

    இதுவரை 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார். இதற்கான காரணம் என்ன என்பதை கோவை சரளா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    கோவை சரளா

    4 தங்கை மற்றும் ஒரு தம்பியுடன் பிறந்தவர் கோவை சரளா. அவர்களுக்கு திருமணம் செய்துவைத்து தற்போது அவர்களே பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறார். மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். தன்னுடைய வாழ்க்கையை தன்னுடைய சகோதரன் சகோதரிக்காக அர்ப்பணித்து விட்டதால் திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறியுள்ளார்.
    நடன இயக்குனர் மற்றும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர் வீட்டில் விசேஷம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
    பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவர் சாண்டி மாஸ்டர். இவர் இறுதிப் போட்டி வரை சென்று ரன்னராக வெற்றி பெற்றார். சாண்டியின் மனைவி மற்றும் லாலா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தபோது ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களும் லாலா பாப்பாவுடன் விளையாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் தற்போது சாண்டி மாஸ்டரின் மனைவி மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் மிகவும் எளிமையாக நடத்தப்பட்டது. சாண்டி மாஸ்டரின் குழந்தை லாலா பாப்பா தனது அம்மாவுக்கு நலங்கு வைத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சாண்டி மாஸ்டர்

    சாண்டி மாஸ்டரின் மனைவிக்கு இரண்டாவது குழந்தை வரும் ஆகஸ்ட் மாதம் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், விஜய் சொன்னதன் பேரில் ரசிகர்கள் களத்தில் இறங்கி உதவி செய்து இருக்கிறார்கள்.
    இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. 

    ஒருபுறம் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது.

    விஜய் ரசிகர்கள்

    இந்நிலையில் விஜய் சொன்னதன் பேரில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் தேவைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு தேவையான முகக் கவசங்கள், கையுறைகள் விஜய் மக்கள் இயக்கத்தினரால் வழங்கப்பட்டன.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
    சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதை ஐஸ்வர்யா ராஜேஷ் மறுத்து இருக்கிறார். புஷ்பா படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், அது பொய்யான தகவல்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவின் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான ரைசாவிடம் பெண் நிபுணர் இழப்பீடாக 5 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்.
    நடிகை ரைசா வில்சன் கடந்த வாரம் தன்னுடைய சமூக வலைதளங்களில் முகம் வீங்கி இருப்பது போன்ற ஒரு படத்தை பதிவு செய்து மருத்துவர் பைரவி செந்திலிடம் எடுக்கப்பட்ட சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவர் பைரவி செந்தில், ரைசா மூன்று நாட்களில் இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது மானநஷ்ட வழக்கை சந்திக்க நேரிடும் என்று நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். 

    அதற்கு மற்றொரு நோட்டீஸ் மூலம் பதில் அளித்திருந்த ரைஸா, தனது முகத்திற்கு பைரவியின் சிகிச்சையால் தான் இப்படி ஆனது என்றும் அதற்கு ஈடாக ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தற்போது மருத்துவர் பைரவி செந்தில் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி இருக்கிறார். 

    ரைஸா

    இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ’ரைசா இதே சிகிச்சையை இதற்கு முன் எங்களிடம் மூன்று முறை எடுத்திருக்கிறார். முகத்தில் அழகு சேர்க்கும் சிகிச்சையை ரைசா எடுத்துக் கொண்டார். அவருடைய ஒப்புதலின் பேரில் தான் இந்த சிகிச்சையை கொடுக்கப்பட்டது. இந்த சிகிச்சை எடுத்துக் கொண்ட பின் மூன்று நாட்களுக்கு அனைவருக்குமே முகத்தில் வீக்கம் இருக்கும் என்றும் சிகிச்சைக்கு முன்னும் பின்னும் செய்யப்பட வேண்டிய சில விஷயங்களை ரைசாவிற்கு எடுத்துரைத்தோம். அதை செயல்படுத்தாமல் மீறினால் பக்க விளைவுகள் வரும் என்றும் எச்சரித்துவிட்டு தான் சிகிச்சையை தொடங்கினோம். 

    எங்களுடைய மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் உள்நோக்கத்துடன் ரைசா செயல்பட்டு இருப்பதால் நஷ்டஈடாக அவர் 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறோம்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×