என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளருமான ரம்யா பாண்டியனின் தம்பி பற்றி வந்த செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
    ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். 

    ரம்யா பாண்டியன் தம்பி

    அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார். இந்நிலையில் ரம்யாவின் தம்பி பரசு பாண்டியன் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை பரசு மறுத்து, வேறு என்னென்னெ வதந்திகள் எல்லாம் இது போல வைத்துள்ளீர்கள் எனக் கேட்டுள்ளார்.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சித்தார்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    மத்திய அரசின் செயல்பாடுகள் மீதான விமர்சனத்தை ட்விட்டர் வாயிலாக தெரிவித்து வருகிறார் நடிகர் சித்தார்த். அவரது கருத்துகளுக்கு பெரும் ஆதரவும், எதிர்ப்புகளும் எழுவது வழக்கம். கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு எழுந்திருக்கும் நிலையில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உ.பி.யில் ஆக்சிஜன் தட்டுப்பாடே இல்லை, அப்படி யாராவது செய்தி பரப்பினால் அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பொய் சொல்வது சாமானிய மனிதனோ, சாமியாரோ, தலைவரோ யாராக இருந்தாலும் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று சித்தார்த் பதிவு செய்தார். அவரது இந்த கருத்துக்கு பாஜக தொண்டர்கள் பலரும் எதிர்வினையாற்றினர்.

    சித்தார்த்

    இந்நிலையில் உத்திரப்பிரதேச முதல்வரை அவதூறாக பேசியதாக நடிகர் சித்தார்த் மீது பாஜக நிர்வாகி ஆனந்தன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். இதனிடையே தனது தொலைபேசி எண்ணை தமிழக பாஜகவினர் இணையத்தில் கசியவிட்டிருப்பதாகவும் அதனால் இதுவரை 500க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் தனக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
    பிரபல தமிழ் நடிகை ஒருவரின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து தனது சமூக வலைதளம் மூலம் உதவி கேட்டுள்ளார்.
    ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ படத்தில் நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவருடைய பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைத்தள பக்கத்தில் தனது தந்தைக்கு ரெம்டிசிவிர் மருந்து தேவை என்றும் தனக்கு தொடர்பு உள்ளவர்களிடம் அந்த மருந்தை கேட்டுள்ளதாகவும் அந்த மருந்தை கிடைக்க உதவி செய்யவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

    சம்யுக்தா

    தனது பெற்றோரை வீட்டில் வைத்து சிகிச்சை செய்து வருகிறோம். இருவரையும் தான் கவனித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தயவு செய்து தனக்கு ரெம்டிசிவிர் மருந்து கிடைக்க உதவி செய்யவும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படமான ஜென்டில்மேன் படத்தில் நடித்து பிரபலமான நடிகையின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படமான ஜென்டில்மேன் திரைப்படத்தில் 2 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் சுபஸ்ரீ. இப்படத்தை அடுத்து எங்க தம்பி, ஓஹோ, முத்து, புதிய மன்னர்கள் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் திறமை காட்டியுள்ளார். இவர் பிரபல கன்னட நடிகை மாலஸ்ரீயின் தங்கை ஆவார்.

    சுபஸ்ரீ

    இந்நிலையில், தனது சகோதரி மற்றும் குடும்பத்துடன் சுபஸ்ரீ அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். ஜென்டில்மேன் படத்தில் நடித்தவரா இவர் என ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
    பல படங்களில் நடித்த நடிகர் சத்யராஜ் தனது தாயுடன் இருக்கும் அரிதான புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
    தமிழ் சினிமாவில் நக்கல், நய்யாண்டி கொண்ட கதாநாயக வேடங்களில் நடிக்க சத்யராஜை விட்டால் சிறப்பான நடிகர் வேறு யாரும் இல்லை. ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களைக் குறைத்துக்கொண்டு குணச்சித்திர வேடங்களில் நடித்து இப்போதும் பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார். 

    தாயுடன் சத்யராஜ்

    சத்யராஜ் எப்போதுமே தனது குடும்பத்தினரை தனது புகழ் வெளிச்சத்துக்கு கொண்டுவர விரும்பமாட்டார். இந்நிலையில் இப்போது அவர் தனது 90 வயது அம்மாவுடன் இருக்கும் மிகவும் அரிதான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.
    கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக 'சூர்யா 40', 'விக்ரம் 60', சிவகார்த்திகேயனின் 'டான்' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், தியேட்டர்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தாலும் முறையான விதிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கி இருந்தது. இதனால், பல படங்களின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

    சூர்யா - விக்ரம்

    இந்நிலையில், தற்போது சூர்யா நடிக்கும் 'சூர்யா 40', விக்ரமின் 'விக்ரம் 60', சிவகார்த்திகேயனின் 'டான்' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முன்னெச்சரிகையோடு நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், பல படங்களின் படப்பிடிப்புகள் இந்த வாரத்தோடு நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
    கடந்த 24 மணி நேரத்தில் தனக்கும் தன்னுடைய குடும்பத்தினர்களுக்கும் 500க்கும் மேற்பட்ட மிரட்டல் கால்கள் வந்திருப்பதாக நடிகர் சித்தார்த் கூறியிருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் சித்தார்த். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய தொலைபேசி எண்ணை பாஜகவின் ஐடி பிரிவினர் வெளியிட்டதாகவும் இதனால் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் கால்கள் வருவதாகவும் கூறியுள்ளார்.

    சித்தார்த்

    24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 500 மிரட்டல் கால்கள் வந்து இருப்பதாகவும் அதில் பாலியல் வன்முறை, கொலை மிரட்டல் உள்ளிட்ட மிரட்டல்கள் அடங்கும் என்றும், மிரட்டல் கால்கள் அனைத்தும் ரெக்கார்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் அவை அனைத்தும் காவல்துறை வசம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சித்தார்த்தின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் சாண்டி, சுருதி செல்வம் நடிப்பில் உருவாகி வரும் மூணு முப்பத்தி மூணு படத்தின் முன்னோட்டம்.
    பிரபல நடன இயக்குனரான சாண்டி இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘3:33’. டி.ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இப்படத்தை நம்பிக்கை சந்துரு இயக்கி உள்ளார். இதில் சுருதி, ரமா, ரேஷ்மா, மைம் கோபி, சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நகைச்சுவை கலந்த பேய் படமாக உருவாகியுள்ள இதில் பாடல்கள் இல்லையாம். 

    சாண்டி

    படத்தை பற்றி இயக்குனர் நம்பிக்கை சந்துரு கூறியதாவது: வழக்கமான பேய் படங்களை விட முற்றிலும் மாறுபட்டு திக்... திக்... என திகில் கலந்த படம் இது. திக் திக் என காட்சிக்கு காட்சி திகில் அதிகரித்துக்கொண்டே போகும். படத்துக்காக மாங்காடு அருகே ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து, அதை பேய் பங்களாவாக மாற்றினோம். பெரும்பகுதி காட்சிகள் அந்த பங்களாவுக்குள்ளேயே படமாக்கப்பட்டன. படத்தை இயக்கியிருப்பதுடன், டாக்டர் வேடத்தில் நடித்தும் இருக்கிறேன்” என்கிறார்.
    ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாம்.
    ‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ஹெச்.வினோத்திற்கு அடுத்ததாக அஜித் பட வாய்ப்பு தேடி வந்தது.

    அதன்படி அஜித்தை வைத்து இவர் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தனது அடுத்தபடத்தையும் இயக்கும் வாய்ப்பை அஜித் கொடுத்தார். இயக்குனர் ஹெச்.வினோத் தற்போது அஜித்தின் ‘வலிமை’ படத்தை இயக்கி வருகிறார்.

    இதனிடையே வலிமை படத்துக்கு பின் அஜித் நடிக்க உள்ள ‘தல 61’ படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்க உள்ளதாக தகவல் பரவி வந்தது. 

    அஜித், ஹெச்.வினோத்

    ஆனால் சமீபத்திய தகவல்படி, நடிகர் அஜித் தற்போதைக்கு அடுத்த படம் குறித்து எந்தவித முடிவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அவரது முழு கவனமும் வலிமை படத்தில் தான் உள்ளதாம், அப்படத்தை முடித்த பின்னர் தான் அடுத்த படத்திற்கான கதையை கேட்க அஜித் திட்டமிட்டுள்ளாராம். வலிமை படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த படம் சுல்தான். அதிரடி ஆக்‌ஷன் படமான இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைத்திருந்த இப்படம், ஏப்ரல் 2-ந் தேதி தமிழ், தெலுங்கில் வெளியானது. 

    தமிழகத்தைப் போலவே ஆந்திரா, தெலுங்கானாவிலும் சுல்தான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். 

    சுல்தான் படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், சுல்தான் படத்தின் தெலுங்குப் பதிப்பு வருகிற ஏப்ரல் 30-ந் தேதி ஓடிடியில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதேபோல் விரைவில் சுல்தான் தமிழ் பதிப்பின் ஓடிடி வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. 

    மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5  மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

    ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர்

    இப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி தசரா பண்டிகையையொட்டி வெளியிட உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது, கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் படத்தின் வெளியீட்டை அடுத்தாண்டு ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. 
    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் விடுதலை படத்தில், விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். 

    நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இணைந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

    விடுதலை படத்தின் போஸ்டர்

    ஆரம்பத்தில் ‘விடுதலை’ படத்தை தமிழில் மட்டுமே வெளியிட திட்டமிட்டிருந்த தயாரிப்பாளர், விஜய் சேதுபதியின் வருகையாலும், அவருக்கு தெலுங்கு, இந்தி போன்ற திரையுலகில் இருக்கும் மார்க்கெட் காரணமாக பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளார். அதன்படி தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
    ×