என் மலர்
சினிமா செய்திகள்
கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவருடைய உடலை வீட்டிற்கு அனுப்பாமல், நேரடியாக மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். நள்ளிரவில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், இதனால் அவரே காரை ஓட்டிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அதிகாலை 3 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கே.வி.ஆனந்த் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக கே.வி.ஆனந்தின் மனைவி மற்றும் மகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த 24-ம் தேதி அன்று இயக்குனர் கே.வி.ஆனந்துக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு கே.வி.ஆனந்த் உயிரிழந்துள்ளார்.

இயக்குனர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவருடைய உடலை வீட்டிற்கு அனுப்பாமல், நேரடியாக பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. ஆம்புலன்சில் ஒரு குளிர்சாதனப் பெட்டிக்குள் பாதுகாப்பு உடைகள் அணிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.
மின் மயானத்துக்கு செல்லும் வழியில் அவரது குடும்பத்தினர், அஞ்சலி செலுத்துவதற்காக, அவரது வீட்டின் வாசலில் ஆம்புலன்ஸ் சிறிது நேரம் நின்றது. அப்போது கே.வி.ஆனந்தின் மனைவி மற்றும் மகள்கள் ஆம்புலன்ஸின் கண்ணாடி வழியே அவரது உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் சிறிது நேரத்தில் அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானம் கொண்டு செல்லப்பட்டது.
இயக்குனரும், கே.வி.ஆனந்துடன் முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களில் பணியாற்றியவருமான ஷங்கர், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. இவர் அயன், மாற்றான், கோ, அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கி உள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், இயக்குனரும், கே.வி.ஆனந்துடன் முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களில் பணியாற்றியவருமான ஷங்கர், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “கே.வி.ஆனந்த் மறைந்த செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். என் இதயம் கனக்கிறது. என்னால் இதை ஏற்க முடியவில்லை. அன்பு நண்பரை இழந்துவிட்டேன். கே.வி.ஆனந்த், ஒரு அற்புதமான ஒளிப்பதிவாளர், அட்டகாசமான இயக்குனர். இந்த இழப்பை ஈடுசெய்யவே முடியாது. உன்னை மிஸ் பண்றேன் அன்பு நண்பா. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் கத்தி, தெறி, தனுஷின் மாரி போன்ற படங்களில் நடித்து பிரபலமான குணச்சித்திர நடிகர் செல்லதுரை நேற்று காலமானார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி, அட்லி இயக்கிய தெறி, தனுஷின் மாரி, ஹிப்ஹாப் ஆதியின் ‘நட்பே துணை’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் செல்லதுரை. சென்னையில் வசித்து வந்த இவர், நேற்று மாலை காலமானார். இவருக்கு வயது 84. நடிகர் செல்லதுரை மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த மாதம் மட்டும் தமிழ் திரையுலகை சேர்ந்த நான்கு பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 17-ம் தேதி விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார், நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) இயக்குனர் தாமிரா கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். நேற்று (ஏப்ரல் 29) குணச்சித்திர நடிகர் செல்லதுரை உடல்நலக்குறைவால் காலமானார். இன்று (ஏப்ரல் 30) இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மறைவுக்கு, நடிகர் தனுஷ் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். 54 வயதான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அநேகன் படத்தில் நடித்த நடிகர் தனுஷ், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “நேர்மையான மனிதர் இறந்துவிட்டார். அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்த இனிமையானவர் கே.வி.ஆனந்த். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள், அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என பதிவிட்டுள்ளார்.
பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மறைவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. இவர் அயன், மாற்றான், கோ, அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கி உள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த், கே.வி.ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மறைவுக்கு, நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. இவர் அயன், மாற்றான், கோ, அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கி உள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், கே.வி.ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி” என பதிவிட்டுள்ளார்.
பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மறைவுக்கு, ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். 54 வயதான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பெரும் திறமை கொண்ட ஒளிப்பதிவாளர்-இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு, மிகுந்த வேதனையை தருகிறது. திரை உலகின் பேரிழப்பு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மறைவுக்கு, கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். 54 வயதான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் கவிஞர் வைரமுத்து, கே.வி.ஆனந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
“வருந்துகிறேன் நண்பா!
திரையில்
ஒளிகொண்டு
சிலை செதுக்கினாய்!
வாஜி வாஜி பாடலை
ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!
என்
எத்தனையோ பாடல்களை
ரத்தினமாய் மாற்றினாய்!
இதோ
உனக்கான இரங்கல்பாட்டை
எங்ஙனம் படம் செய்வாய்?
விதவையான கேமரா
கேவிக்கேவி அழுகிறது
கே.வி.ஆனந்த்!
ஒளியாய் வாழ்வாய்
இனி நீ.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த், திரைத்துறையில் கடந்த வந்த பாதை குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம்.
ஆரம்ப காலகட்டத்தில் பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த கே.வி.ஆனந்த், சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக, பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக அமரன், மீரா, தேவர் மகன், திருடா திருடா போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.
ஒளிப்பதிவாளராக....
இதையடுத்து மலையாள இயக்குனரான பிரியதர்ஷன், 1994-ல் மோகன்லால் நடித்த ‘தென்மாவின் கொம்பத்’ எனும் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ற வருமாறு பிசி ஸ்ரீராமை அழைத்துள்ளார். ஆனால் அவரோ வேறு படங்களில் பிசியாக இருந்ததால், தனது உதவியாளரான கே.வி.ஆனந்தை பரிந்துரை செய்துள்ளார். இப்படி எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட கே.வி.ஆனந்த், அப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை வென்று சாதித்து காட்டினார்.

இதையடுத்து, 1996-ல் கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான கே.வி.ஆனந்த், பின்னர் இயக்குனர் ஷங்கருடன் ‘முதல்வன்’ படத்தில் கூட்டணி அமைத்தார். கே.வி.ஆனந்தின் ஒளிப்பதிவு ஷங்கருக்கு மிகவும் பிடித்துப்போனதால், ‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ என அடுத்தடுத்த படங்களில் அவருடன் பணியாற்றினார். கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்த கடைசி படம் ‘சிவாஜி’ தான். ஏனெனில் அவர் அப்படத்திற்கு பின் படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.
இயக்குனராக...
2005-ல் வெளியான ‘கனா கண்டேன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கே.வி.ஆனந்த். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாவிட்டாலும், இவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து இயக்கிய ‘அயன்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்றது. சூர்யாவுக்கும் அப்படம் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் 2009-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக அயன் அமைந்தது.

இதையடுத்து ஜீவா நாயகனாக நடித்த ‘கோ’ படத்தை இயக்கி வெற்றி கண்ட கே.வி.ஆனந்த் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். பின்னர் சூர்யாவுடன் ‘மாற்றான்’, தனுஷுடன் ‘அநேகன்’, விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ போன்ற படங்களில் பணியாற்றிய கே.வி.ஆனந்த், கடைசியாக சூர்யா நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான ‘காப்பான்’ படத்தை இயக்கி இருந்தார். இதன்பின் அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை.
இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தார். அவரின் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அயன், கோ, மாற்றான், அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இன்று காலை காலமானார்.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். 54 வயதான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

2005-ம் ஆண்டு வெளியான கனா கண்டேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான கே.வி.ஆனந்த், தொடர்ந்து அயன், கோ, மாற்றான், அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். இதுதவிர, காதல் தேசம், முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார்.
தனக்கு வந்த 500 மிரட்டல் கால்களை கண்டு தனது தாய் பயந்துவிட்டதாகவும், ரசிகர்கள் ஆதரவாக களமிறங்கியதாகவும் நடிகர் சித்தார்த் கூறியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் சித்தார்த். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய தொலைபேசி எண்ணை பாஜகவின் ஐடி பிரிவினர் வெளியிட்டதாகவும் இதனால் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 500 மிரட்டல் கால்கள் வந்ததாகவும் கூறினார்.

இதற்கு சமூக வலைத்தளத்தில் சித்தார்த்துக்கு ஆதரவாக ரசிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வந்தார்கள். இதற்கு நடிகர் சித்தார்த், எனக்கு வரும் மிரட்டல்களைப் பார்த்து என் அம்மா மிகவும் பயந்துவிட்டார். அவருக்குத் தைரியம் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை, அதனால், உங்கள் ட்வீட்களைதான் அவர்களிடம் படித்தேன். என்னுடன் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. மிகவும் எளிய பின்னணியிலிருந்து வந்த மிகவும் சாதாரண மனிதர்கள் நாங்கள். எங்களுக்கு உங்கள் ஒவ்வொருவரின் வார்த்தைகளும் அத்தனை மதிப்புமிக்கவை என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருக்கிறார்.
தமிழ், கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சுதீப் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வந்தாலும், மலையாளம் மற்றும் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தடையில்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கன்னட பிக்பாஸ் சீசன்-8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் சுதீப். கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுதீப் தொகுத்து வழங்கவில்லை.


அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஒரு வாரம் அவரை ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்பேரில் கடந்த வார நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கவில்லை. இந்த நிலையில் தனது உடல்நிலை சீராகிவிட்டதாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சுதீப், இந்தவாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதாக தெரிவித்துள்ளார்.






