என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரோனாவை எல்லோரும் சேர்ந்து, அரசு சொல்வதை கேட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் தொட்டு பேசாமல் வெல்வோம் என வடிவேலு தெரிவித்துள்ளார்.
    தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை.

    இந்நிலையில், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் வடிவேலு பேசியிருப்பதாவது: “கொரோனாவால் பீதி ஏற்பட்டு உள்ளது. வெளியே போக கூடாது. யாரையும் தொட்டு பேசக்கூடாது. கை கொடுக்க கூடாது என்கின்றனர். மருத்துவ உலகத்தையும், மனித உலகத்தையும் மிரட்டி வைத்துள்ளது கொரோனா. இந்த மாதிரி யாருமே பார்த்தது இல்லை.

    என்னிடம் ஒரு அம்மா எப்போது நடிக்க போகிறீர்கள் என்று கேட்டார். இப்போது நடிக்க வருவதற்கும் படம் எடுப்பதற்கும் ஆள் தயாராக இல்லை. படம் பார்க்க வருவதற்கும் யாரும் இல்லை. அப்புறம் எப்படி நான் தனியாக போய் நடிப்பது. இறைவன் கொரோனா என்ற ஒரு படத்தை ரிலீஸ் செய்து இருக்கிறான். கொரோனா படத்தை இறைவன் எப்போது தூக்குவான் என்றே தெரியவில்லை. 

    வடிவேலு

    அதை தூக்கினால்தான் எல்லோரும் வெளியே வர முடியும். ஒரு படத்தில் சும்மா உட்காருவது எவ்வளவு கஷ்டம் என்று சவால் விட்டு நடித்து இருந்தேன். அதை காமெடியாகத்தான் செய்தேன். ஆனால் உண்மையிலேயே எல்லோரும் சும்மா உட்கார்ந்தால் எப்படி இருக்கும் என்று உணர வைத்து இருக்கிறான் இறைவன். பயம் வேண்டாம். கொரோனாவை எல்லோரும் சேர்ந்து, அரசு சொல்வதை கேட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் தொட்டு பேசாமல் வெல்வோம்”. இவ்வாறு வடிவேலு கூறியுள்ளார்.
    கொரோனா தொற்று உறுதியானதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக கோமாளி பட நடிகை தெரிவித்துள்ளார்.
    கொரோனா 2-வது அலையில் நடிகர் -நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகினர் பலர் சிக்கி வருகிறார்கள். தற்போது நடிகை சம்யுக்தா ஹெக்டேவும் கொரோனா தொற்றில் சிக்கி உள்ளார். இவர் ஜி.வி.பிரகாசுடன் வாட்ச்மேன், ஜெயம் ரவியின் கோமாளி, வருணுடன் பப்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    சம்யுக்தா ஹெக்டேவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் சம்யுக்தா ஹெக்டேவின் பெற்றோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    சம்யுக்தா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நண்பர்களே. நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது நான் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். 

    சம்யுக்தா ஹெக்டே
    சம்யுக்தா ஹெக்டே

    மருத்துவர்கள் ஆலோசனைப்படி அனைத்து நெறிமுறைகளையும் கடைப்பிடித்து வருகிறேன். உங்களை கவனித்துக்கொள்ளுங்கள். எனது பெற்றோர் நன்றாக குணமடைந்து வருகிறார்கள். அவர்கள் ஆரோக்கியத்தோடு திரும்பியதற்காக பிரபஞ்சத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
    ம்.ஜி.ஆரின் ஏராளமான படங்களுக்கு வாலி பாடல் எழுதிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் (1964), சிவாஜி படங்களுக்கும் பாட்டு எழுத அழைப்பு வந்தது
    மதாபாத்:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமாக விளங்கிய சுனில் கவாஸ்கர் 1971-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி போர்ட் ஆப் ஸ்பெயினில் தொடங்கிய வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகம் ஆனார். 5 ஆட்டங்கள் கொண்ட அந்த தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. தனது அறிமுக தொடரிலேயே கவாஸ்கர் 4 சதம், 3 அரைசதம் உள்பட 774 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தினார். 1987-ம் ஆண்டில் ஓய்வு பெற்ற அவர் 125 டெஸ்டில் ஆடி 34 சதம் உள்பட 10,122 ரன்களும், 108 ஒருநாள் போட்டியில் விளையாடி 3,092 ரன்களும் எடுத்துள்ளார்.

    71 வயதான கவாஸ்கர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆமதாபாத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான நேற்று மதிய உணவு இடைவேளையின் போது அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நினைவு பரிசாக தொப்பியை வழங்கி கவுரவித்தார். முன்னதாக கவாஸ்கர் ஸ்டேடியத்தில் ‘கேக்’ வெட்டி சிறப்பித்தார். முன்னாள் வீரர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். ‘நான் அவரது ஆட்டத்தை வியந்து பார்த்ததுடன் அவரை போன்று உருவாக முயற்சித்தேன். அதில் ஒருபோதும் மாற்றமில்லை. அவர் தான் என்றும் எனது கதாநாயகன்’ என்று சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
    போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் ரிலீஸ் பற்றி சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
    அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் வலிமை படத்தின் 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுவிட்டது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் 4 மெலோடி பாடல்கள் இடம்பெற்றிருக்கும் இந்த படத்தில் அஜித் கம்பீரமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    வலிமை

    இந்நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாகப் போவதாக இணையதளங்களில் காட்டுத்தீ போல தகவல்கள் பரவிவர, பலரும் இதனை மறுத்து வருகின்றனர். எனினும் ஓடிடியில் வலிமை படம் ரிலீஸ் ஆகிறது என்று டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. ஆனால், இதை ஓடிடி டிவிட்டர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    காமெடி நடிகர் சூரி, தன் மனைவியுடன் அருகில் இருக்கும் மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
    தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது.

    இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூரி, மனைவியுடன் அருகில் இருக்கும் மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். 

    மேலும் இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும் போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க என்று பதிவு செய்து இருக்கிறார்.


    நடிகை லைலா பிதாமகனில் தான் நடித்த காமெடி வசனத்திலிருந்து வெளிவந்த மீமை பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
    கள்ளழகர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை லைலா, அதைத் தொடர்ந்து முதல்வன், ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில், அள்ளித்தந்த வானம், நந்தா, பிதாமகன், கண்ட நாள் முதல், உள்ளம் கேட்குமே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

    லைலா

    கொரோனா விழிப்புணர்வு பற்றி பிரபலங்கள் பலரும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வர நடிகை லைலா சற்று வித்தியாசமாக பிதாமகன் திரைப்படத்தில் தான் நடித்த காமெடி காட்சியை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற கொரோனா விழிப்புணர்வு மீம்ஸை ரசித்து விட்டு அதை பகிர்ந்தும் உள்ளார்.
    தமிழ் சினிமாவில் நடிகராகவும் பாடலாசிரியராகவும் இருக்கும் கவிஞர் சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு ஹிட் பாடல்களை எழுதியவர் சினேகன். இவர் யோகி மற்றும் உயர்திரு 420 ஆகிய படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்டு தமிழகமெங்கும் பிரபலமானார். 

    அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனோடு ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அவர் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்து செயல்பட தொடங்கினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    சினேகன்

    இந்நிலையில் சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும், கட்சித்தலைவர் கமல்ஹாசனின் தலைமையில்தான் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
    கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா 'கிரிக்பார்டி, படத்தின் மூலம் புகழ் பெற்றார். சிறப்பான நடிப்பு மற்றும் அழகான சிரிப்பால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அவர், சமூகவலைதளங்களிலும் எப்போதும் தீவிரமாக இருக்கிறார். கிரிக்கெட் மீது தீராத ஆர்வம் கொண்ட அவர் அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரூ ராயல்சேலஞ்சர்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்தார். தன்னுடயை பதிவுகளிலும் ராயல்சேலஞ்சர்ஸ் அணியையும், வீரர்களின் விளையாட்டையும் புகழ்ந்து தள்ளி, கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். 

    இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கே 'ஐ.பி.எல் கோப்பை' எனக் கூறி ஐ.பி.எல் கிரிக்கெட் ரசிகர்கள் வட்டாரத்தில் புயலைக் கிளப்பினார். அவருடைய ஒவ்வொரு பதிவையும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அண்மையில் திடீரென இன்ஸ்டாகிராம் லைவில் வந்த ராஷ்மிகா மந்தனா, ரசிகர்களின் கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்தார்.

    ராஷ்மிகா தோனி

    அவர் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருப்பதாலும், ஐ.பி.எல் போட்டியில் பெங்களுரு அணிக்கு ஆதரவு தெரிவித்திருந்ததாலும், கிரிக்கெட் தொடர்பான கேள்விகளையும் ரசிகர்கள் ராஷ்மிகாவிடம் கேட்டனர். அப்போது, கிரிக்கெட்டில் யார் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ராஷ்மிகா, மகேந்திரசிங் தோனி என்றார். கிரிக்கெட் மைதானத்தில் தோனியின் அணுகுமுறை, பேட்டிங், கேப்டன்சி என அனைத்தையும் தான் ரசிப்பதாகவும், கிரிக்கெட்டுக்கு தேவையான 100 விழுக்காட்டையும் அவர் கொடுப்பதாக புகழ்ந்து தள்ளினார். மேலும், தோனியில் மிகத் தீவிர ரசிகை என்றும் ராஷ்மிகா தெரிவித்தார்.
    ஊரடங்கில் தொடர்ந்து உதவி செய்து வரும் நடிகர் சோனு சூட்டிற்கு மிகப்பெரிய கட் அவுட் வைத்து மாலைப்போட்டு பொதுமக்கள் பால் ஊற்றி வணங்கியுள்ளனர்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்துள்ளார். 

    தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் நடிகர் சோனு சூட்டிடம் உதவி கேட்டு ஏராளமான அழைப்புகள், மெசேஜ்கள் குவிந்தவண்ணம் உள்ளது. அவர்களுக்கு தன்னால் இயன்றவரை உதவி வருகிறார் சோனு சூட்.

    இந்நிலையில் சோனுசூட்டின் மனித நேயத்தப் பாராட்டி ஆந்திர மாநிலம் சித்தூரில் சோனு சூட்டின் மிகப்பெரிய கட் அவுட்டை வைத்து மாலைப்போட்டு பொதுமக்கள் பால் ஊற்றி வணங்கியுள்ளனர். அதோடு, பொதுமக்களுக்கு உணவையும் வழங்கி 'நாங்கள் இனிமேல் தொடர்ந்து பொதுமக்களுக்கு சேவை செய்யவிருக்கிறோம். சோனு சூட்தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்' என்றும் தெரிவித்துள்ளனர்.


    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தாவின் வெப் தொடருக்கு சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது.
    தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் தற்போது பேமிலி மேன் 2 என்ற வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. முதல் தொடர் சிறப்பாக அமைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். 

    சமீபத்தில் இதன் டிரெயிலர் வெளியானது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தமிழர்களை குறிப்பாக ஈழத்தமிழர்களையும் அவர்களது போராட்டத்தையும் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பேமிலி மேன் 2
    பேமிலி மேன் 2 போஸ்டர்

    அமேசான் ப்ரைமில் ஜூன் 4-இல் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிசை தடை செய்ய வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
    நடிகர் அல்லு அர்ஜுன் 45 வயதிற்கு மேற்பட்ட தனது பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளார்.
    தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார். அவரது நடிப்பில் 'புஷ்பா' படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. 

    அல்லு அர்ஜுன்

    கொரோனாவின் இரண்டாவது அலையால், ஆக்சிஜன், படுக்கை வசதி, தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில் தன்னிடம் பணிபுரியும் 45 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இலவச தடுப்பூசியை செலுத்த ஏற்பாடு செய்துள்ளதாக அல்லு அர்ஜுன் அறிவித்துள்ளார். அவரின், இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
    பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனா தொற்றில் சிக்கியவர்கள் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்ற விவரங்களை பகிர்ந்துள்ளார்.
    நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையில் சிக்கி லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ரகுல்பிரீத் சிங்குக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று மீண்டார்.

    ரகுல்பிரீத் சிங் கொரோனா தொற்றில் சிக்கியவர்கள் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்ற விவரங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “கொரோனா தொற்றில் சிக்கினால் வலிமையாக இருங்கள். ஆரோக்கியமாக இருங்கள். அதிக கலோரி உள்ள உணவுகளை சாப்பிடாமல் தவிருங்கள். ஜீரணிக்க கடினமான உணவுகளை சாப்பிட வேண்டாம். பால், வறுத்த மற்றும் உறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.

    ரகுல் பிரீத் சிங்

    ஆரோக்கியமான சத்தான உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். நீர்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். சூடான தேநீர், சூப் வகைகளை பருகுங்கள். கசப்பான காய்கறிகளை சாப்பிடுங்கள். எளிமையான உணவுகளையே எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்று கூறியுள்ளார்.
    ×