தொழில்நுட்பம்

இந்தியாவில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2018-10-30 17:47 GMT   |   Update On 2018-10-30 17:47 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #oneplus6t



ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 6.41 இன்ச் ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே, சிறிய நாட்ச், கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 வழங்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 6டி மாடலில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது, எனினும் IP சான்றிதழ் எதுவும் பெறவில்லை.

புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார், F/1.7 அப்ரேச்சர், OIS, 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், F/1.7 அப்ரேச்சர், 16 எம்.பி. சோனி IMX371 சென்சார் கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



ஒன்பிளஸ் 6டி சிறப்பம்சங்கள்:

- 6.41 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10nm பிராசஸர்
- அட்ரினோ 630 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
- ஆன்ட்ராய்டு 9.0 பை, ஆக்சிஜன் ஒ.எஸ். 9.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார்
- 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், F/1.7 அப்ரேச்சர்
- 16 எம்.பி. சோனி IMX371 செல்ஃபி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மிரர் பிளாக் மற்றும் மிட்நைட் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.37,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.41,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.45,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை நவம்பர் 1ம் தேதி துவங்குகிறது. ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான், ஒன்பிளஸ் விற்பனையகங்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் குரோமா விற்பனையகங்களில் நவம்பர் 3ம் தேதி முதல் நடைபெறுகிறது.



அறிமுக சலுகைகள்

- அமேசான் வலைதளத்தில் ஒன்பிளஸ் 6டி வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் போது ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

- அமேசான் வலைதளத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை 6 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி.

- நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதிக்குள் ஸ்மார்ட்போன் வாங்குவோர் பிரீபெயிட் முறையில் கட்டணம் செலுத்தும் போது ரூ.1000 கேஷ்பேக் அமேசான் பே கணக்கில் சேர்க்கப்படுகிறது.

- ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் ரூ.299 சலுகையை தேர்வு செய்யும் போது ரூ.5,400 வரை உடனடி கேஷ்பேக், ரூ.150 மதிப்புள்ள 36 வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News