தொழில்நுட்பம்

90-ஸ் கிட்ஸ் பயன்படுத்திய பிரபல மெசன்ஜர் செயலிக்கு மூடுவிழா

Published On 2018-07-18 08:17 GMT   |   Update On 2018-07-18 08:17 GMT
90-ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த மெசன்ஜர் செயலி 20 ஆண்டுகளுக்கு பின் மூடுவிழா கண்டது. இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #YahooMessenger



தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற மெசன்ஜர் சேவைகள் இன்று புகழின் உச்சியில் இருக்கும் நிலையில், 90-ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருந்த யாஹூ மெசன்ஜர் 20 ஆண்டு சேவையை நிறுத்தியது.

இன்றைய மெசன்ஜர் செயலிகளுக்கு சீனியராக இருக்கும் யாஹூ மெசன்ஜர் ஆப் பயனர்கள் தங்களது சாட் ஹிஸ்ட்ரியை டவுன்லோடு செய்ய ஆறுமாத கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. வெரிசான் எனும் டெலிகாம் குழுமத்தின் அங்கமாக இருக்கும் ஓத் நிறுவனம் யாஹூவை நிர்வகிக்கிறது.



யாஹூ மெசன்ஜருக்கு மாற்றாக அந்நிறுவனம் ஸ்கூரில் (Squirrel) எனும் செயலியை உருவாக்கி வருகிறது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சேவைகளின் வரவுக்கு பின் யாஹூ மெசன்ஜர் பயன்பாடு குறைய ஆரம்பித்தது. 

மார்ச் 9, 1998-ம் ஆண்டு யாஹூ பேஜர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சேவை 1999-ம் ஆண்டு யாஹூ மெசன்ஜர் என பெயர் மாற்றப்பட்டது. யாஹூ மெசன்ஜர் சேவையை 12.26 கோடி பேர் பயன்படுத்தினர். சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ட்விட்டரில் யாஹூ மெசன்ஜர் நினைவலைகளில் 90-ஸ் கிட்ஸ் மூழ்கினர்.
Tags:    

Similar News