அறிந்து கொள்ளுங்கள்

ஐபோனுக்கு அதிரடி விலை குறைப்பு அறிவித்த அமேசான்

Published On 2022-08-24 09:19 GMT   |   Update On 2022-08-24 09:19 GMT
  • ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
  • புதிய ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தி பணிகள் இந்தியாவிலும் விரைவில் துவங்க இருப்பதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடலை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், அமேசான் தளத்தில் ஐபோன் 13, ஐபோன் 12 போன்ற மாடல்களுக்கு சிறப்பு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. விலை குறைப்பின் படி ஐபோன் 13 (128 ஜிபி) தற்போது ரூ. 69 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. இந்த மாடலுக்கு 13 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இத்துடன் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 24 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி பெற முடியும். ஐபோன் 12 (64 ஜிபி) மாடலுக்கு 18 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை தற்போது ரூ. 53 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இந்த மாடலுக்கும் அதிகபட்சமாக ரூ. 24 ஆயிரம் வரை எக்சேன்ஜ் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


ஐபோன் 12 மாடலில் 6.1 இன்ச் அளவில் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, 2532x1172 பிக்சல் ரெசல்யூஷன், ஏ14 பயோனிக் சிப்செட், 2815 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 4 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் சிப்செட், 12MP வைடு ஆங்கில் கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 12MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் 6.1 இன்ச் அளவில் ஐபோன் 14, 6.7 இன்ச் அளவில் ஐபோன் 14 மேக்ஸ், 6.1 இன்ச் ஐபோன் 14 ப்ரோ மற்றும் 6.7 இன்ச் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஐபோன் 13 ப்ரோ மாடல்களை விட ஐபோன் 14 ப்ரோ மாடல்களின் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags:    

Similar News