அறிந்து கொள்ளுங்கள்

புதிய அம்சங்களுடன் பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ்

Published On 2025-11-20 08:21 IST   |   Update On 2025-11-20 08:21:00 IST
  • சாலையில் உள்ள போக்குவரத்து தடைகள், மாற்றுப்பாதைகள் குறித்தான தகவல்கள் கிடைக்கும்.
  • பயண மேலாண்மையை எளிதாக்கும் வகையில், கூகுல் வாலட் இணைப்பும் வழங்கப்படுகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் இருந்தால் போதும் நாட்டின் எந்த பகுதிக்கும் யாரிடமும் வழி கேட்காமல் சென்று விடலாம். அந்த அளவிற்கு பிரபல வழிகாட்டி சேவை தளமாக கூகுள் மேப்ஸ் உள்ளது. தனது செயலில் புதிய அம்சங்களை கூகுள் மேப்ஸ் இணைத்துள்ளது. கூகுள் ஏ.ஐ.யான ஜெமினியுடன் கூகுள் மேப்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இதனால் பயனர்கள் தங்கள் செல்போனை தொடாமல் நிகழ்நேர உரையாடல்களில் ஈடுபட முடியும், மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் கூகுள் மேப்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இதனால் சாலையில் உள்ள போக்குவரத்து தடைகள், மாற்றுப்பாதைகள் குறித்தான தகவல்கள் கிடைக்கும். விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளை நெருங்கும்போது பயனர்களை கூகுள் மேப்ஸ் இப்போது முன்கூட்டியே எச்சரிக்கும். இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்காக, மேப்ஸ் புதிய அவதார் வசதியையும் வழங்குகிறது. பயண மேலாண்மையை எளிதாக்கும் வகையில், கூகுல் வாலட் இணைப்பும் வழங்கப்படுகிறது.

கூகுள் மேப்ஸ் மூலம் மெட்ரோ ரெயில் டிக்கெட் வாங்கும் வசதி உள்ளிட்டவையும் புதிய அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News