அறிந்து கொள்ளுங்கள்

எக்ஸ், ஓபன் ஏஐ தளங்கள் உலகமெங்கும் முடக்கம் - பயனர்கள் அவதி

Published On 2025-11-18 22:26 IST   |   Update On 2025-11-18 22:26:00 IST
  • கிளவுட்பிளேரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இவை முடங்கியதாக தெரியவந்துள்ளது.
  • இணையதளங்களை கண்காணிக்கும் Down Detector அறிக்கை வெளியிட்டுள்ளது.

எக்ஸ் சமூக வலைதளம்,சாட் ஜிடியின் ஓபன் ஏஐ உள்ளிட்டவை இன்று மாலை முதல் உலகமெங்கும் பல இடங்களில்  முடங்கின.

இவை, இணைய உள்கட்டமைப்பு நிறுவனமான கிளவுட்பிளேர் சேவையின் மூலம் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கிளவுட்பிளேரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இவை முடங்கியதாக தெரியவந்துள்ளது.

இணையதளங்களை கண்காணிக்கும் Down Detector அறிக்கையின்படி, இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோர் எக்ஸ் முடக்கம் குறித்த புகார்களை தெரிவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

உள்நுழைவு சிக்கல்கள் மற்றும் சர்வர் இணைப்பு தோல்விகள் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டதாக பயனர்கள் தெரிவித்தனர்.

இந்த கோளாறை உறுதி செய்துள்ள கிளவுட்பிளேர் நிறுவனம் சிக்கலை தீர்க்க முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது.   

Tags:    

Similar News