நவராத்திரி ஸ்பெஷல்

Navratri Special: நவராத்திரியின் ஆறாம் நாளில் பக்தர்கள் அணிய வேண்டிய ஆடையின் நிறம்...

Published On 2025-09-27 07:00 IST   |   Update On 2025-09-27 07:00:00 IST
  • மன உணர்ச்சியை கட்டுப்படுத்தி மனதிற்கு அமைதியை அளித்து, ஆனந்த பெருவாழ்வுக்கு அழைத்து செல்வது தான் இந்த நவராத்திரி வழிபாடு.
  • சக்தி மற்றும் அநீதியை அழித்தல் கடவுளான காத்யாயனி தேவியை மனமுருக வணங்கி ஆசியை பெறுவோமாக!

அம்பாளுக்கு உகந்த விரதங்களில் நவராத்திரி விரதம் மிகவும் சிறப்புடையதாகும். புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி நவமி வரையில் ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

நவராத்திரி முதல் மூன்று தினங்கள் துர்க்கைக்கு உரியதாகும். அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமிக்கு உரியதாகும். இறுதி மூன்று தினங்கள் சரஸ்வதிக்கு உரியதாகும்.

நவராத்திரி ஒன்பது தினங்களிலும் அம்பாள் ஒன்பது வகையான திருக்கோலங்களுடன் ஆராதிக்கப் பெறுகிறாள்.

முதல் நாளில் மூன்று வயதுள்ள பாலையாகவும், இரண்டாம் நாளில் ஒன்பது வயதுள்ள குமாரியாகவும்,

மூன்றாம் நாளில் பதினைந்து வயதுள்ள தருணியாகவும், நான்காம் நாளில் பதினாறு வயதுள்ள சுமங்கலியாகவும்,

ஐந்தாம் நாளில் ரூபிணியாகவும், ஆறாம் நாளில் ஸ்ரீவித்யா ரூபிணியாகவும், ஏழாம் நாளில் மகா துர்க்கையாகவும்,

எட்டாம் நாளில் மகாலட்சுமியாகவும், ஒன்பதாம் நாளில் சும்பன், நிசும்பனைக் கொன்ற சரஸ்வதி தேவியாகவும்,

பத்தாம் நாளில் சிவ சக்தி ஐக்கிய ரூபிணியாகவும் வழிபடுதல் வேண்டும்.

யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்

தீதுநன்மை எல்லாம் காளி தெய்வ லீலையன்றோ

பூதம் ஐந்துமானாய் காளி பொறிகள் ஐந்துமானாய்

துன்பம் நீக்கிவிட்டாய் காளி தொல்லை போக்கிவிட்டாய்

-என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப முப்பெரும் தேவியர்களும் ஒன்றாகி நாம் ஒவ்வொருவருடைய துன்பங்களையும், தொல்லைகளையும் போக்கி இன்ப வாழ்வு வழங்க நவராத்திரி விழாவையே நாம் கொண்டாடுகிறோம்.

மன உணர்ச்சியை கட்டுப்படுத்தி மனதிற்கு அமைதியை அளித்து, ஆனந்த பெருவாழ்வுக்கு அழைத்து செல்வது தான் இந்த நவராத்திரி வழிபாடு.

நவராத்திரியின் ஆறாம் நாளில் காத்யாயனி தேவிக்கு விருப்பமான சாம்பல் நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் சமநிலை மற்றும் நிலத்தன்மையை குறிக்கிறது. சக்தி மற்றும் அநீதியை அழித்தல் கடவுளான காத்யாயனி தேவியை மனமுருக வணங்கி ஆசியை பெறுவோமாக!

Tags:    

Similar News