Navratri Special: நவராத்திரி 7-ம் நாளில் பக்தர்கள் அணிய வேண்டிய ஆடையின் நிறம்...
- பிரசித்தி பெற்ற திருக்கோவில்களிலும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- பார்வதி தேவியின் மிகவும் உக்கிரமான மற்றும் மிகவும் பாதுகாப்பான வடிவமான காலராத்திரி தேவியை வழிபட வேண்டிய நாள்.
நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்பாளுக்கு உகந்த பண்டிகை என்பதால் பெண்கள் பய பக்தியுடன் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு நாளுக்கு உகந்த தேவியை மனமுருகி வழிபட்டு வருகின்றனர்.
நவராத்திரி பூஜைக்கான சுலோகங்கள், மந்திரங்கள் எதுவும் தெரியவில்லையா? கவலையே வேண்டாம். 'ஓம் ஸ்ரீலலிதா தேவியே நம' என்பதை 108 தடவை சொன்னாலே போதும். நினைத்த பலன் கிடைக்கும்.
மேலும், வீட்டில் அமைக்கப்பட்டு இருக்கும் கொலுவை காண வருமாறு நண்பர்கள், உறவினர்களை அழைத்து அவர்களை உபசரிக்கின்றனர். பிரசித்தி பெற்ற திருக்கோவில்களிலும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நவராத்திரியின் ஏழாம் நாளான இன்று பக்தர்கள் பார்வதி தேவியின் மிகவும் உக்கிரமான மற்றும் மிகவும் பாதுகாப்பான வடிவமான காலராத்திரி தேவியை வழிபட வேண்டிய நாள். காலராத்திரி பயமின்மை மற்றும் துணிச்சலின் பண்புகளை உள்ளடக்கியதால், வலிமை மற்றும் பாதுகாப்பை நாடுபவர்களுக்கு இந்த நாள் குறிப்பிடத்தக்கது.
காலராத்திரி தேவியை வழிபட இன்று பக்தர்கள் ஆரஞ்சு நிறத்திலான ஆடையே அணிய வேண்டும். ஆரஞ்சு நிறமானது மகிழ்ச்சி, சக்தி மற்றும் அரவணைப்பின் நிறம். இன்றைய நாளில் ஆரஞ்சு நிற ஆடையே அணிந்து பூஜை அறை மற்றும் இல்லத்தை ஆரஞ்சு நிறத்திலான மலர்களை கொண்டு அலங்கரியுங்கள்.