நவராத்திரி ஸ்பெஷல்

நவராத்திரி 4-ம் நாளில் பக்தர்கள் அணிய வேண்டிய ஆடையின் நிறம் என்ன தெரியுமா?

Published On 2025-09-25 07:15 IST   |   Update On 2025-09-25 07:15:00 IST
  • நவராத்திரி பூஜையானது முற்றிலும் சுமங்கலி பெண்களுக்குரியதாகும்.
  • நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால், வீட்டில் செல்வச்செழிப்பு பெருகும்.

'நவ' என்பது ஒரு சிறப்பு வாய்ந்த சொல்லாகும். இதற்கு இரு பொருள்கள் உண்டு. ஒன்று ஒன்பது மற்றொன்று புதியது. எனவே நவராத்திரியை ஒன்பது ராத்திரி என்றும் சொல்லலாம். புதிய ராத்திரிகள் என்றும் சொல்லலாம்.

நவராத்திரி பூஜையானது முற்றிலும் சுமங்கலி பெண்களுக்குரியதாகும். காரணம், இதில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று சிருஷ்டி, வரிசைப்படி பார்த்தால் முறையே சரஸ்வதி, லட்சுமி, துர்கை என்று தான் வரும். ஆனால் நவராத்திரியின் போது இவை மாற்றம் அடைந்து, துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்றாகிறது.

சிறப்புக்குரிய நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை உச்சரித்து வழிபட்டால், மனதில் நினைக்கும் பலன்கள் கிடைக்கும். நவராத்திரி பூஜைக்கான சுலோகங்கள், மந்திரங்கள் எதுவும் தெரியவில்லையா? கவலையே வேண்டாம். 'ஓம் ஸ்ரீலலிதா தேவியே நம' என்பதை 108 தடவை சொன்னாலே போதும். நினைத்த பலன் கிடைக்கும்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால், வீட்டில் செல்வச்செழிப்பு பெருகும்.



அப்படியான நவராத்திரி விழா தொடங்கி மூன்று நாட்கள் முடிந்து உள்ளது. சதுர்த்தி திதியில் வியாழக்கிழமையான இன்று நவராத்திரியின் நான்காம் நாள் கூஷ்மாண்டா தேவிக்கு அர்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மஞ்சள் நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் மகிழ்ச்சியை குறிக்கிறது.

பக்தர்கள் மஞ்சள் நிறத்தை அணிந்து, மனதை நேர்மறை மற்றும் நம்பிக்கையின் ஒளியால் நிரப்புங்கள். மஞ்சள் நிறம் கொண்ட சாமந்தி பூவைக் கொண்டு வழிபாடு செய்யலாம். 

Tags:    

Similar News