புதுச்சேரி

பள்ளி வகுப்பறையில் புத்தக பையில் பதுங்கி இருந்த பாம்பு: மாணவர்கள்-ஆசிரியர்கள் அலறியடித்து ஓட்டம்

Published On 2024-03-12 05:25 GMT   |   Update On 2024-03-12 05:27 GMT
  • புத்தக பையில் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியில் அந்த மாணவர் கூச்சலிட்டார்.
  • ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம்.

புதுச்சேரி:

புதுச்சேரி நகர பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார்.

வகுப்பு தொடங்கியதும் தனது புத்தகப்பையை அந்த மாணவர் எடுக்க முயன்றார். அப்போது புத்தக பையில் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியில் அந்த மாணவர் கூச்சலிட்டார்.

அதை கேட்டதும் மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்பறையில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே பள்ளி நிர்வாகத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், வேலாயுதம் ஆகியோர் உடனடியாக பள்ளிக்கு விரைந்து வந்து மாணவரின் புத்தகப்பையில் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தனர்.

இதன் பின்னரே மாணவர்களும் ஆசிரியர்களும் நிம்மதியடைந்தனர். பின்னர் வழக்கம் போல் வகுப்பு தொடங்கியது.

இது குறித்து வனத்துறை ஊழியர்கள் கூறும் போது பிடிப்பட்ட பாம்பு விஷம் இல்லாத சாரை பாம்பு. வளர்ந்த பெரிய சாரைப் பாம்புகளின் கடி வலி மிகுந்ததாக இருந்தாலும் விஷதன்மை அற்றது. ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம். புத்தக பைகளை எடுக்கும் போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News