உலகம்

"ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்ட மோடி.." இந்தியா மீதான வரியை 18% ஆக குறைப்பதாக டிரம்ப் அறிவிப்பு

Published On 2026-02-03 00:31 IST   |   Update On 2026-02-03 00:31:00 IST
  • உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
  • அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.

இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மோடி எனது மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவர். அவருடன் பேசியதை பெருமையாக கருதுகிறேன்.

வர்த்தகம் மற்றும் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து நாங்கள் பேசினோம்.

ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் அவர் ஒப்புக்கொண்டார்.

இதன்மூலம் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும்.

பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

கூடுதலாக, 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News