உலகம்

மத்திய பட்ஜெட் 2026: வங்கதேசத்திற்கான நிதியுதவி பாதியாக குறைப்பு

Published On 2026-02-01 17:43 IST   |   Update On 2026-02-01 17:43:00 IST
  • இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன.
  • பிற அண்டை நாடுகளுக்கான நிதியுதவியை இந்தியா அதிகரித்துள்ளது.

2026-27 மத்திய பட்ஜெட்டில் அண்டை நாடான வங்கதேசத்திற்கு இந்தியா வழங்கி வந்த நிதியுதவி பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2025-26) வங்கதேசத்திற்கு ரூ.200 கோடி நிதியுதவி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் அது ரூ.100 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, யூனுஸ் தலைமையிலான அரசாங்கம் மற்றும் அங்குள்ள சில அமைப்புகள் இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன.

மேலும் வங்கதேசம் பாகிஸ்தானுடன் உறவுகளை வளர்த்து வருகிறது. வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினராக இந்துக்கள், கிறிஸ்தவர்களும் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் அந்நாட்டிற்கான நிதி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

வங்கதேசத்திற்கு நிதி குறைக்கப்பட்ட அதே வேளையில், நேபாளம், பூடான், இலங்கை மற்றும் மாலத்தீவு போன்ற பிற அண்டை நாடுகளுக்கான நிதியுதவியை இந்தியா அதிகரித்துள்ளது.    

Tags:    

Similar News