உலகம்

இந்திய இறைச்சிக்கு திடீர் தடை விதித்த கிர்கிஸ்தான்: இதுதான் காரணம்

Published On 2026-02-01 00:26 IST   |   Update On 2026-02-01 00:26:00 IST
  • நிபா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மக்களுக்கு தொற்றும் அபாயம் உள்ளது.
  • இதனால் வர்த்தகம், பயண விஷயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பிஷ்கேக்:

இந்தியாவில் இருந்து வாங்கும் இறைச்சி மற்றும் மாடு, ஆடு, கோழி, பன்றிகளின் இறக்குமதிக்கு கிர்கிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக கிர்கிஸ்தான் உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் நிபா வைரஸ் பரவல் உள்ளது. இந்த நிபா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மக்களுக்கு தொற்றும் அபாயம் உள்ளது. இதனால் வர்த்தகம் மற்றும் பயண விஷயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னெச்சரிக்கையாக இந்தியாவில் இருந்து வரும் இறைச்சி உள்பட விலங்குகளில் இருந்து கிடைக்கும் உற்பத்தி சார்ந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும், நம் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்ட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு வரும் மக்கள் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பயணிகளின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் நிபா வைரஸ் கட்டுக்குள் உள்ளது என்றும், தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News