தரையில் கிடக்கும் பெண்.. தகாத முறையில் பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு - புதிய எப்ஸ்டீன் கோப்புகள்
- பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் சகோதரரான ஆன்ட்ரூவின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
- மற்றொரு ஆவணத்தில், ஆண்ட்ரூ ஐந்து பெண்களின் மடியில் படுத்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
அமெரிக்காவில் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டவர் தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சர்ச்சை கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க நீதித்துறை நேற்று லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்களை வெளியிட்டது.
அதில் அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரு, நியூ யார்க் மேயர் மம்தானியின் தாயும் பிரபல எழுத்தாளருமான மீரா நாயர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
ரஷிய பெண்களுடன் உறவு வைத்து பால்வினை நோயால் பில் கேட்ஸ் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார் என புதிய கோப்புகளில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் கோப்புகளில் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் சகோதரரான ஆண்ட்ரு தரையில் கிடக்கும் பெண் ஒருவருடன் தகாத முறையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
ஒரு புகைப்படத்தில் அந்தப் பெண்ணின் வயிற்றுப் பகுதியில் ஆண்ட்ரூ கை வைத்திருப்பது போலவும், மற்றொன்றில் அவர் கேமராவை நேரடியாகப் பார்ப்பது போலவும் உள்ளது.
கடந்த மாதம் வெளியான மற்றொரு ஆவணத்தில், ஆண்ட்ரூ ஐந்து பெண்களின் மடியில் படுத்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
மேலும் ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக ஆண்ட்ரூவின் இளவரசர் மற்றும் டியூக் ஆஃப் யார்க் போன்ற அரச பட்டங்கள் கடந்த ஆண்டே பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.