ரஷிய பெண்களுடன் பாலியல் உறவு.. பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட பில் கேட்ஸ்.. எப்ஸ்டீன் கோப்புகளில் பகீர்
அமெரிக்காவில் வளரிளம் பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாகும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டவர் தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சர்ச்சை கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்க நீதித்துறை நேற்று லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்களை வெளியிட்டது.
அதில் அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரு, நியூ யார்க் மேயர் மம்தானியின் தாயும் பிரபல எழுத்தாளருமான மீரா நாயர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் பேட்ஸ் குறித்து கோப்புகளில்அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதாவது, ரஷியப் பெண்களுடன் ஏற்பட்ட பாலியல் தொடர்பு காரணமாகப் பில் கேட்ஸிற்குப் பால்வினை நோய் (STD) ஏற்பட்டதாகவும், அதைத் தனது மனைவி மெலிண்டா கேட்ஸிற்குத் தெரியாமல் மறைக்க அவர் ரகசியமாக மருந்துகளை உட்கொண்டதாகவும் புதிய ஆவணங்கள் கூறுகின்றன.
2013-இல் எப்ஸ்டீன் தனக்குத்தானே அனுப்பிக்கொண்ட மின்னஞ்சல்களில் பில் கேட்ஸ் குறித்து இத்தகைய தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.
மெலிண்டாவிற்குத் தெரியாமல் இருக்க எப்ஸ்டீனின் உதவியுடன் பில் கேட்ஸ் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பெற்றதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மின்னஞ்சல்களை அழித்துவிடுமாறு பில் கேட்ஸ் தன்னிடம் கோரியதாகவும் எப்ஸ்டீன் தனது குறிப்புகளில் எழுதியுள்ளார்.
இதற்கிடையே இந்தக் குற்றச்சாட்டுகளைப் பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
எப்ஸ்டீனுடன் பழகியது தனது வாழ்வின் மிகப்பெரிய தவறு என்று பில் கேட்ஸ் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளார்.
2021-இல் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா விவாகரத்து செய்தபோது, எப்ஸ்டீனுடனான கேட்ஸின் நட்பும் ஒரு முக்கிய காரணமாக மெலிண்டாவால் சுட்டிக்காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.