உலகம்

காங்கோ சுரங்க நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 227 ஆக உயர்வு

Published On 2026-02-02 02:21 IST   |   Update On 2026-02-02 02:21:00 IST
  • கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்க பகுதிகள் திடீரென இடிந்து விழுந்தன.
  • நிலச்சரிவில் சிக்கிய உடல்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

கின்ஷாசா:

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டின் கிழக்கு கிழக்கு பகுதியில் ருபாயா எனும் இடத்தில் கோல்டான் என்ற உலோக தாது சுரங்கம் அமைந்துள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால், சுரங்கத்தின் பல பகுதிகள் திடீரென இடிந்து விழுந்தன. இதில் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் உட்பட 200 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. நிலச்சரிவில் சிக்கிய உடல்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மழைக்காலம் என்பதால் அங்குள்ள மண் மிகவும் பலவீனமாக இருந்ததே இந்த நிலச்சரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், காங்கோ சுரங்க நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 227 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News