உலகம்

இசை உலகில் ஒரு மகுடம்- முதல் கிராமி விருதை வென்றார் திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா

Published On 2026-02-02 14:50 IST   |   Update On 2026-02-02 14:50:00 IST
  • போதனைகளும், புனிதமான திபெத்திய மந்திரங்களும் இசையுடன் கோர்க்கப்பட்டுள்ளன.
  • ஆபிரகாம் குனின் மற்றும் ஜூன்யெல் குனின் ஆகியோர் இந்த ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளனர்.

2026-ம் ஆண்டுக்கான 68-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா நேற்று (பிப்ரவரி 1) அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது முதல் கிராமி விருதை வென்றுள்ளார்.

தி ரிஃப்ளெக்ஷன்ஸ் ஆஃப் ஹிஸ் ஹோலினஸ் தி தலாய் லாமா' என்ற அவருடைய ஆல்பத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டது. திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது முதல் கிராமி விருதை வென்று ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

அவர் தனது 'Inner World' என்ற இசை ஆல்பத்திற்காக இந்த விருதைப் பெற்றுள்ளார். இந்த ஆல்பம் "Best New Age, Ambient, or Chant Album" என்ற பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டு வெற்றி பெற்றது.

இதில் தலாய் லாமா அவர்களின் போதனைகளும், புனிதமான திபெத்திய மந்திரங்களும் இசையுடன் கோர்க்கப்பட்டுள்ளன.

நியூசிலாந்தைச் சேர்ந்த இசைக்கலைஞர்களான ஆபிரகாம் குனின் மற்றும் ஜூன்யெல் குனின் ஆகியோர் இந்த ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளனர்.

மன அழுத்தம் மற்றும் கவலை நிறைந்த உலகில், அமைதியையும் கருணையையும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டது.

இதற்கு முன்னரும் தலாய் லாமா அவர்களின் சில உரையாடல்கள் மற்றும் ஆல்பங்கள் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால், அவர் நேரடியாகப் பங்குபெற்று கிராமி விருதை வெல்வது இதுவே முதல் முறை.

Tags:    

Similar News