லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
உக்ரைன் நோக்கிச் சென்ற ரஷிய ராணுவ சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. ரஷியாவின் ரியாசான் நகரில் எரிபொருள் நிரப்பிக்கொணடு புறப்பட்ட சிறிது நேரத்தில் அவசரமாக தரையிறங்க முயன்றது. அப்போது தரையில் மோதி தீப்பிடித்தது. விமானத்தில் பயணித்த 9 பேரில் 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் ரஷிய எரிவாயு சப்ளை நிறுத்தம் போன்ற அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்வது? என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
ரஷியா நமது சுதந்திரம் மற்றும் ஒற்றுமையை சோதித்து வரும் இந்த தருணத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதற்கான வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது, ஐரோப்பாவை வலுப்படுத்துவதற்கான பெரிய நகர்வு என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் கடற்கரையில் கண்ணிவெடி அகற்றுவதற்கு பிரிட்டன் உதவ தயாராக இருப்பதாகவும், தானிய ஏற்றுமதியை எளிதாக்க கப்பல்களுக்கு காப்பீடு வழங்கலாம் என்றும் கூறியுள்ளார்.
உக்ரைனின் துறைமுகங்கள் ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட நிலையில், அண்டை நாடான ருமேனியாவின் கருங்கடல் துறைமுகமான கான்ஸ்டன்டா, உலக உணவு நெருக்கடியின் மத்தியில் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் தானிய ஏற்றுமதிக்கான முக்கிய வழித்தடமாக உருவெடுத்துள்ளது.
உக்ரைன் மீதான முழு ரஷ்ய படையெடுப்பின் சில கடுமையான சண்டைகள் சீவிரோடோனெட்ஸ்கில் நடந்தன. அங்கு கடந்த ஒரு மாதமாக தெருவுக்கு தெரு சண்டை நடந்து வருகின்றன. ரஷ்யா மெதுவாகவும் கடினமாகவும் அதிக இடத்தைப் பிடித்தது. இந்நிலையில், பெரும்பாலும் ரஷ்ய ஆக்கிரமிப்பு போர்க்கள நகரமான சீவிரோடோனெட்ஸ்கில் இருந்து உக்ரேனிய துருப்புக்கள் "வாபஸ் பெறப்பட வேண்டும்" என்று பிராந்திய ஆளுநர் தெரிவித்தார்.
உக்ரைனிய ஆயுதப்படையின் சமீபத்திய ராணுவ அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை குறைந்தபட்சம் 34,430 ரஷிய வீரர்களை உக்ரைன் துருப்புக்கள் அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 1,500 ரஷிய டாங்கிகள், 756 பீரங்கி அமைப்புகள், 240 எம்எல்ஆர் ஆயுதங்கள் ஆகியவற்றை உக்ரைன் ராணுவம் அழித்ததாக தெரிவித்தனர்.
பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு தொடங்கியது. இதில் உக்ரைன் மற்றும் மால்டோவாவை வேட்பாளராக 27 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன. ஐரோப்பிய ஒன்றியம் ஒரு நாட்டை உறுப்பினராக சேர்த்துக் கொண்டால்தான் நேரடியாக ராணுவ உதவி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட சக்திவாய்ந்த மல்டிபிள் ராக்கெட் லாஞ்சர்கள் உக்ரைனை வந்தடைந்துள்ளதாக உக்ரைன் ராணுவ மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்தார்.
"இந்த சக்திவாய்ந்த ஆயுதங்களை அனுப்பியதற்காக, அமெரிக்க ராணுவ மந்திரியும் எனது நண்பருமான லாயிட் ஆஸ்டினுக்கு நன்றி! ரஷிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு கோடைக்காலம் மிகவும் சூடாக இருக்கும். அவர்களில் சிலருக்கு இதுவே கடைசியாக இருக்கும்" என்று ஒலெக்சி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிப்ரவரி 24 அன்று போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 34,430 ரஷிய வீரர்களை உக்ரைன் துருப்புக்கள் அழித்துள்ளதாக உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது. இதுதவிர 1,500 ரஷிய டாங்கிகள் மற்றும் 756 பீரங்கி அமைப்புகள் மற்றும் 240 மல்டிபிள் ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவற்றை அழித்துள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.