உலகம்

சிலியில் கியாஸ் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் பல மீட்டர் தூரத்திற்கு பரவிய தீ- வீடியோ

Published On 2026-02-21 14:08 IST   |   Update On 2026-02-21 14:08:00 IST
  • டேங்கர் லாரி கவிழ்ந்ததில் திரவ வாயு வெளியேறி புகை மண்டலமாக மாறியது.
  • பின்னர் திடீரென தீப்பெடித்து எரிந்ததில் பலர் சிக்கிக் கொண்டனர்.

தென் அமெரிக்கா நாடான சிலியின் தலைநகர் சான்டியாகோவில் திரவ எரிவாயு ஏற்றிக் கொண்டு நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இதில் திரவு வாயு டேங்கர் வெடித்து சிதறியது. இதனால் புகை சாலையெங்கும் பரவியது. பல மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளித்தது. திடீரென புகை மண்டலம் தீயாக பரவியது. இதில் பல கார்கள் சிக்கிக் கொண்டன.

4 பேர் உயிரிழந்த நிலையில், 17 பேர் காயம் அடைதுள்ளது. இந்த விபத்து டேங்கர் லாரி டிரைவரும் உயிரழந்தார். 150 முதல் 200 மீட்டர் வரை பரவிய புகையால் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமாகின.

Tags:    

Similar News