உலகம்

மார்ச் 31-ல் சீனா செல்கிறார் அதிபர் டிரம்ப்: அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார்

Published On 2026-02-21 03:09 IST   |   Update On 2026-02-21 03:09:00 IST
  • சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க அதிபர் டிரம்ப் பீஜிங் செல்கிறார்.
  • உலகின் சக்திவாய்ந்த இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல நட்புறவு உள்ளது என்றார்.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 4-ம் தேதி அன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவியை சீனா வரவேண்டும் என அதிபர் ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மார்ச் 31-ம் தேதி சீனா புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டுள்ளார். ஏப்ரல் 2-ம் தேதி வரை சீனாவில் பயணம் மேற்கொள்கிறார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்காக அதிபர் டிரம்ப் ஏப்ரல் மாதம் பீஜிங் செல்வதாகத் தகவல் வெளியானது.

இதுதொடர்பாக அமெரிக்க ஊடகத்திற்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், உலகின் சக்திவாய்ந்த இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல நட்புறவு உள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News