உலகம்

பணத்தை போல உலகில் வேறெதுவுமில்லை.. இந்தியா-பாகிஸ்தான் போரை இப்படித்தான் நிறுத்தினேன் - டிரம்ப்

Published On 2026-02-20 14:54 IST   |   Update On 2026-02-20 15:02:00 IST
  • அவர்கள் இருவரை பற்றி எனக்கு தெரியும். மோடியை பற்றி நன்றாகவே தெரியும்.
  • 200 சதவீத வரி விதிப்பேன் என்றவுடன் போரை நிறுத்த ஒப்புக்கொண்டனர்.

இந்தியா அமெரிக்கா இடையே நடக்க இருந்த போரை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் அமைத்த அமைதி வாரியத்தின் கூட்டத்தில் பேசிய டிரம்ப், இரு நாடுகள் மீதும் 200 சதவீதம் வரி விதிப்பேன் என மிரட்டியதால் இந்தியா பாகிஸ்தான் போரை கைவிட்டன என்று தெரிவித்தார்.

மோதல் தீவிரமடைந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. நான் இருவரையும் (மோடி, ஷெபாஸ் ஷெரீப்) போனில் அழைத்தேன். அவர்கள் இருவரை பற்றி எனக்கு தெரியும். மோடியை பற்றி நன்றாகவே தெரியும்.

இந்த பிரச்சனையை உங்களுக்குள் தீர்க்கவில்லை என்றால் உங்களுக்கு வர்த்தக ஒப்பந்தங்கள் தரமாட்டேன் என்று நான் மிரட்டினேன். நீங்கள் சண்டை போட்டால் ஒவ்வொருவர் மீதும் 200 சதவீத வரி விதிப்பேன் என்றவுடன் போரை நிறுத்த ஒப்புக்கொண்டனர்.

இருவரும் சண்டை போடவே விரும்பினர், ஆனால் பணம் என்று வந்துவிட்டால், அதை போல உலகில் வேறெதுவுமில்லை.

இதில் நிறைய பணம் சம்பந்தப்பட்டுள்ளது என்று உணர்ந்தவுடன் இருவரும், சரி நாங்கள் சண்டையை நிறுத்துகிறோம் என்று கூறிவிட்டனர். ஆனால் ஏற்கனவே 11 ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டிருந்தன. மிகவும் விலையுயர்த்தவை அவை" என்று கூறி முடித்தார்.  

2025 ஆம் ஆண்டு ஏப்ரலில் 16 பேர் கொல்லப்பட்ட பாஹலாம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7 அன்று ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. தொடர்ந்து இரு நாடுகளும் இடையே நடந்த மோதல் மே 9 அன்று மாலை உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது. 

Tags:    

Similar News