உலகம்

வேற்றுகிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகளை வெளியிட டிரம்ப் அதிரடி உத்தரவு - வெளிவரும் மர்மங்கள்!

Published On 2026-02-20 18:38 IST   |   Update On 2026-02-20 18:38:00 IST
  • பிரபஞ்சம் மிகப் பெரியது. மற்ற கிரகங்களில் உயிர் இருக்க வாய்ப்புள்ளது.
  • ஒபாமாவின் சந்தேகங்களை நீக்குவேன் என்றார்.

வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா, இல்லையா என்று உலகம் முழுவதும் கடந்த நூற்றாண்டில் இருந்தே பல விவாதங்கள் இருந்து வருகிறது.

அவற்றுக்கு வலு சேர்க்கும் வானில் ஏற்படும் வினோதமான நிகழ்வுகள், விண்கலம் போல் தென்படும் வினோத வாகனங்கள் குறித்த புகைப்படங்கள் கசிவது உண்டு.

அமெரிக்க ஆய்வாளா்கள் வேற்றுக்கிரகவாசிகளை பிடித்து வந்து, அந்நாட்டின் நெவாடா பகுதியில் உள்ள ரகசியமான இடமான 'ஏரியா 51'-இல் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

இதற்கிடையே அண்மையில் பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, "பிரபஞ்சம் மிகப் பெரியது. மற்ற கிரகங்களில் உயிர் இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்ததற்கான எந்த ஆதாரமும் தனக்குக் கிடைக்கவில்லை" என்றார்.

ஒரு முன்னாள் அதிபரே வேற்றுகிரக வாசிகள் இருக்கலாம் என்று கூறியது அமெரிக்காவில் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் வேற்றுகிரகவாசிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் விமானங்கள் பற்றிய கோப்புகளை ரகசிய பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம் அமெரிக்க ராணுவ தலைமையமாக பென்டகன், மற்றும் தொடர்புடைய துறைகள் தங்கள் வசம் உள்ள வேற்றுகிரகவாசிகள் தொடர்புடைய ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், "வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.

அதைப் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. நான் அதைப் பற்றி ஒருபோதும் பேசுவதில்லை. நிறைய பேர் அதை நம்புகிறார்கள். நான் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு ஒபாமாவின் சந்தேகங்களை நீக்குவேன்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News