உலகம்

அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது: அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி

Published On 2026-02-20 23:08 IST   |   Update On 2026-02-20 23:08:00 IST
  • பல்வேறு நாடுகளின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார்.
  • இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வாஷிங்டன்:

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.

உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வரிகளை விதிப்பதற்கு அதிபர் டிரம்புக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது எனக்கூறிய அமெரிக்க உச்சநீதிமன்றம், அவர் விதித்துள்ள வரிகள் செல்லாது என உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்க கீழமை நீதிமன்றம் அதிபர் டிரம்ப் விதிக்கும் வரிகள் அனைத்தும் சட்டவிரோதமானவை எனக்கூறி கடந்த ஆண்டு மே மாதம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Tags:    

Similar News