உலகம்
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து லண்டனில் வெளிநாட்டினருக்கு எதிராக மிகப்பெரிய பேரணி - 1 லட்சம் பேர் பங்கேற்பு
- பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது.
- இந்த மோதலில் 26 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.
தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 26 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
இங்கிலாந்தில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நிறைய பேர் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.