செய்திகள்

மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் விடுதலை ஆனார்

Published On 2018-05-16 06:43 GMT   |   Update On 2018-05-16 06:43 GMT
ஓரின சேர்க்கை மற்றும் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிம் இன்று விடுதலை செய்யப்பட்டார். #AnwarIbrahim
கோலாலம்பூர்:

மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிம். ஓரின சேர்க்கை மற்றும் ஊழல் வழக்கு காரணமாக இவருக்கு கடந்த 1998-ம் ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அன்வர் மறுத்தார். அவரது ஆதரவாளர்களும் எதிர்த்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த மலேசிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடைந்தது. அன்வர் இப்ராஹிமின் மக்கள் நீதி கட்சி மற்றும் பிஎச் கட்சி கூட்டணி வெற்றி பெற்றது.

எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதால் 92 வயதான மகாதீர் முகமது பிரதமர் ஆனார். எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த அன்வரை விடுதலை செய்ய வேண்டும் என மலேசிய மன்னரிடம் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய மன்னர் உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து அவர் இன்று விடுதலை செய்யப்பட்டார். அன்வருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், விடுதலை செய்யப்பட்டதையடுத்து அங்கிருந்தே அரண்மனைக்கு புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையே தற்போதைய பிரதமர் மகாதீர் 2 ஆண்டுகள் மட்டுமே பதவி வகிப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அன்வர் இப்ராகிம் பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #AnwarIbrahim
Tags:    

Similar News