தமிழ்நாடு செய்திகள்

கரூர் சம்பவம் குறித்து த.வெ.க.வினரிடம் ஏன் கேள்வி கேட்பதில்லை?- செந்தில்பாலாஜி ஆவேசம்

Published On 2025-10-05 19:03 IST   |   Update On 2025-10-05 19:03:00 IST
  • விசாரணை முடிந்த பின்பு இறுதி அறிக்கையில் என்ன வருகின்றது என்பதை பார்த்து பேசுவோம்.
  • டிசம்பரில் நடத்த வேண்டிய கூட்டத்தை ஏன் முன்கூட்டியே நடத்தினீர்கள் என பல கேள்விகள் உள்ளது.

கோவையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் சம்பவம் தொடர்பாக அரசின் சார்பில் முழு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மாவட்டத்தில் நடந்த நிகழ்வு குறித்து, கரூரிலிருந்து நான் முழு விளக்கம் கொடுத்துள்ளேன். தற்போது இது தொடர்பாக எஸ்.ஐ.டி. நிறுவப்பட்டு, விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

விசாரணை முடிந்த பின்பு இறுதி அறிக்கையில் என்ன வருகின்றது என்பதை பார்த்து பேசுவோம். அதுதான் சரியாக இருக்கும்.

உங்களைப் போன்ற ஒரு பத்திரிகையாளரிடம் நான் கேட்டேன். அரசின் மீது கேட்கக்கூடிய கேள்விகள், இன்னொரு பக்கம் ஏன் திரும்பி போகவில்லை என்று கேட்டேன். அதனை தான் உங்களிடமும் கூறுகிறேன். யாரை நோக்கி நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இருக்கிறதோ, அதை நீங்கள் தவிர்த்து விடுகிறீர்கள். நீங்களே உங்களை சுய பரிசோதனை செய்து பாருங்கள்.

ஏன் 2 மணி நேரம் லேட் ஆக வந்தீர்கள். 500 மீட்டருக்கு முன்பாக ஸ்கிரீன் போட்டு லைட்டை ஏன் ஆப் செய்தீர்கள் என்று கேட்க வேண்டும். 12 மணிக்கு அறிவித்துவிட்டு ஏன் 7 மணிக்கு வந்தீர்கள்.

டிசம்பரில் நடத்த வேண்டிய கூட்டத்தை ஏன் முன்கூட்டியே நடத்தினீர்கள் என பல கேள்விகள் உள்ளது. இதெல்லாம் பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் வருவதில்லை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதில்லை.

யாரை நோக்கி நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இருக்கிறதோ அதை எல்லாம் தவிர்த்து விடுகிறீர்கள். ஒரு கணம் நீங்களே உங்களை சுய பரிசோதனை செய்து பாருங்கள்.

எதார்த்த சூழ்நிலையை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது. என்ன நடந்தது?. எப்படி நடந்தது?. இதில் யாரெல்லாம் இருக்கிறார்கள். ஒரு கேள்வி என்னிடம் கேட்டால் எதிர் முகாமிலும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் அல்லவா?.

அதற்கு கேள்விகள் வந்தால் பரவாயில்லை. ஒரே தரப்பில் உங்களுடைய கேள்விகள் இருக்கிறது. கரூர் சம்பவம் சம்பந்தமாக எந்த கேள்வியும் வேண்டாம். விசாரணை முடிந்த பின்பு அறிக்கை வந்த பிறகு மீண்டும் சந்திப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News