தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சரை "அங்கிள்" என்று கூறிய விஜய்- அநாகரிகமாக விமர்சித்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

Published On 2025-08-24 16:12 IST   |   Update On 2025-08-24 16:12:00 IST
  • விஜய்யின் கருத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் கடுமையாக விசமர்சித்துள்ளனர்.
  • விஜயை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமையில் விமர்சித்ததால் அரசியல் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரையில் நடந்த தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில், கட்சியின் தலைவர் விஜய், தி.மு.க. குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். குறிப்பாக முதலமைச்சரை 'ஸ்டாலின் அங்கிள்' என்று விஜய் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சித்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், விஜய்யின் கருத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் கடுமையாக விசமர்சித்துள்ளனர்.

அதில், சூரியனை பார்த்து நாய் குரைக்கும், அதற்காக நாய் மீது சூரியன் கோபப்படுவதில்லை என்று ஈரோடு கிழக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

அப்பா, அம்மா, மனைவியை பார்த்து கொள்ள முடியாதவர், மக்களை எப்படி பார்த்து கொள்வார் என்று திமுக எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் தெரிவித்துள்ளார்.

விஜயை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமையில் விமர்சித்ததால் அரசியல் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News