தமிழ்நாடு செய்திகள்

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம்

Published On 2026-02-27 11:40 IST   |   Update On 2026-02-27 11:40:00 IST
  • ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்தரநாத், எம்.எல்.ஏ. ஐயப்பன் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
  • ஓ.பன்னீர்செல்வம் கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நின்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர்.

சென்னை அண்ணா அறிவாலயம் சென்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். அவருடன் அவரது மகன் ரவீந்தரநாத், எம்.எல்.ஏ. ஐயப்பன் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

இதை தொடர்ந்து அவர் தலைமை செயலகம் சென்று சட்டசபை செயலாளரிடம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் வழங்கினார். இவருடன் ஐயப்பன் எம்.எல்.ஏ.வும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நின்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர்.

போடி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.வுமான ஐயப்பனும் பதவியை ராஜினாமா செய்தார்.

Tags:    

Similar News