தமிழ்நாடு செய்திகள்

தமிழக அரசை கண்டித்து 12-ந்தேதி தமிழகம் முழுவதும் #TVK ஆர்ப்பாட்டம்

Published On 2026-03-08 12:51 IST   |   Update On 2026-03-08 13:48:00 IST
  • தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
  • மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சென்னை:

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் வருகிற 12-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்தக்கோரியும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கட்சி சார்பில் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்து ஆர்ப்பாட்டத்திற்கு உரிய அனுமதி பெற்று நடத்த வேண்டும். மாவட்ட தலைநகரங்களில் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News