தமிழ்நாடு செய்திகள்
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - நிவாரண உதவிகள் வழங்கினார் த.வெ.க. தலைவர் விஜய்
- பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியும் நிவாரண பொருட்களை வழங்கியும் வருகின்றனர்.
- வேஷ்டி, சட்டை, பெட்ஷீட் , மளிகை சாமான்கள் என ஒரு குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வழங்கினார்.
சென்னை:
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியும் நிவாரண பொருட்களை வழங்கியும் வருகின்றனர்.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நிவாரணம் வழங்கினார்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரண பொருட்களை விஜய் வழங்கினார்.
நிவாரண பொருட்களில் வேஷ்டி, சட்டை, பெட்ஷீட் , மளிகை சாமான்கள் என ஒரு குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வழங்கினார்.