தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க., சார்பில் போட்டியிட 7,187 பேர் விருப்ப மனு!- முழு விபரம்

Published On 2026-01-01 15:20 IST   |   Update On 2026-01-01 15:20:00 IST
  • அதிமுக சார்பில் போட்டியிட நேற்று வரை விருப்பு மனு அளித்துள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
  • எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என கூறி 2,187 பேர் விருப்ப மனு.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட 7,187 பேர் விருப்பு மனு அளித்துள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

இதில், தங்கள் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என கூறி 2,187 பேர் விருப்ப மனு வழங்கி உள்ளனர்.

இதுதொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள் தங்களுடைய விருப்ப மனுக்களை, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக்கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 15.12.2025 முதல் 23.12.2025 வரையிலும், மற்றும் 28.12.2025 முதல் 31.12.2025 வரையிலும் வழங்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள்.

அதன்பேரில், ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கி உள்ளனர். அதன்படி, எடப்பாடி பழனிசாமி 'தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து 2,187 விருப்ப மனுக்களும், கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி உடன்பிறப்புகள் 'தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வேண்டி', தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா உட்பட 7,988 விருப்ப மனுக்களும், ஆக மொத்தம் 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News