தமிழ்நாடு செய்திகள்

தூத்துக்குடியில் சோகம்: பைக் மீது வேன் மோதியதில் குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

Published On 2026-02-15 22:26 IST   |   Update On 2026-02-15 22:26:00 IST
  • விளாத்திகுளம் அருகே பைக் மீது சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதியது.
  • இந்த விபத்தில் பைக்கில் சென்ற குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சுற்றுலா வேன் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் ஒரே பைக்கில் சென்ற 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்துக்கு காரணமான வேன் ஓட்டுநரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பைக் மீது வேன் மோதியதில் 5 பேர் பலியானது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News