வாக்கு திருட்டு, ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு: பாஜக-வை கடுமையாக விமர்சித்த விஜய்
- பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
- தேர்தலில் தில்லு முல்லு செய்ய மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர முயற்சி.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் இன்று இரவு அரியலூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மத்திய அரசு மக்களை கொடுமை படுத்துவதாக கடுமையாக குற்றம்சாட்டினார்.
பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஜீரோ போட்ட முகவரியில் வசிப்பதாக வாக்காளர் அடையாள அட்டை கொடுத்துள்ளனர். வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
2029-ல் பாஜக-வின் ஆட்சிய முடியப் போகிறது என்பது அவர்களுக்கு தெரியும். மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கிறது. மாநில அரசுகளை கலைத்துவிட்டு ஒரு நேரத்தில் தேர்தலை நடத்த திட்ம். அப்போதுதானே ஒரே நேரத்தில் தில்லு முல்லு வேலைகளை எளிதாக செய்ய முடியும். இதற்கு பெயர் ஜனநாயக படுகொலை.
பாரளுமன்ற தொகுதி வரையறை மூலம் தென்மாநிலங்களை விட வட மாநிலங்களுக்கு அதிக எம்.பி. தொகுதி கிடைக்கும் வகையில் மோசடி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் தவெக முதலில் எதிர்த்தது. எதிர்க்கிறோம். எதிர்ப்போம். தென்இந்திய மாநிலங்களில் அதிகாரத்தை குறைப்பதற்கான மோசடி வேலைகள்தான் ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு, Sir. இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பாஜக செய்யும் துரோகம்.
இவ்வாறு பாஜக அரசு மக்களை கொடுமைப்படுத்துவதாக விஜய் குற்றம்சாட்டினார்.