தமிழ்நாடு செய்திகள்
சிறைகளில் புகையிலை பயன்படுத்தும் கைதிகள்? - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
- சிறையில் புகை பிடிக்காத கைதிகளை தனியாக பிரித்து வைப்பதை அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.
- மனுதாரர் கோரிக்கைகளில் முரண்பாடு உள்ளது
மத்திய, மாவட்ட சிறைகளில் புகையிலை பயன்பாடு தொடர்பாக விதிக்கப்பட்ட தடையை கடுமையாக அமல்படுத்தக்கோரியும், சிறையில் புகை பிடிக்காத கைதிகளை தனியாக பிரித்து வைப்பதை அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்று சையத் அலி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,
சிறைகளில் புகையிலை பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் உள்ள விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். மனுதாரர் கோரிக்கைகளில் முரண்பாடு உள்ளதாக கூறி வழக்கை முடித்து வைத்தார்.