'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி!

ஒரு வீடு கட்டுவதற்குத் தலா ரூ. 3.50 லட்சம் நிதி உதவியைத் தமிழ்நாடு அரசு வழங்குகிறது."குடிசைகள் இல்லாத மாநிலமாக" மாற்றுவதற்காகத் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட திட்டம்
'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி!
Published on

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

குடிசை மற்றும் சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், பட்டா இருந்தும் சொந்தமாக வீடு இல்லாதவர்கள், ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தகுதியுடைய பயனாளிகளுக்கு, 360 சதுர அடி நிலம் இலவசமாக வழங்கப்பட்டு, ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டித்தரப்படும்.

இதுவரை இத்திட்டத்தின்கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கலைஞர் கனவு இல்லம் திட்டம், 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை "குடிசைகள் இல்லாத மாநிலமாக" மாற்றுவதற்காக தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. 2030-க்குள் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com