தமிழ்நாடு செய்திகள்
த.வெ.க. திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் கைது
- நீதிபதி கூறிய கருத்தை விமர்சித்து அவதூறு பதிவு வெளியிட்டதாக நடவடிக்கை.
- சாணார்பட்டி போலீசார் நிர்மல் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்உஎம்.நிர்மல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கில் நீதிபதி கூறிய கருத்தை விமர்சித்து அவதூறு பதிவு வெளியிட்டுள்ளதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் சாணார்பட்டி போலீசார் நிர்மல் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.