தமிழ்நாடு செய்திகள்

திருவிதாங்கூர் தேவசம் போர்டு பவள விழா: கேரள முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Published On 2025-08-26 06:38 IST   |   Update On 2025-08-26 06:38:00 IST
  • திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழா நடைபெறவுள்ளது.
  • தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பர்"

கேரளா மாநிலம், பம்பையில் செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ள திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழா நிகழ்ச்சியான "லோக அய்யப்ப சங்கமம்" நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டுமென கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் கேரள தேவசம் துறை அமைச்சர் வி.என். வாசவன் அவர்கள் சுடிதம் வாயிலாக கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தனர் .

இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "முன்னரே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழாவில் தான் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது என்றும் இவ்விழாவில், தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர் பாபு அவர்களும், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும் பங்கேற்பார்கள்" என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News