தமிழ்நாடு செய்திகள்

TVK Maanadu Live: தவெக மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை... உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்

Published On 2025-08-21 08:53 IST   |   Update On 2025-08-21 22:12:00 IST
2025-08-21 11:19 GMT

"தமிழ்நாட்டுக்கு விடுதலை வேண்டும் என்றால், விஜய் முதல்வராக வேண்டும். இங்கே சீனியர்ஸ் இல்லை என்கிறார்கள் சிலர். யாருங்க சீனியர்? ஓசி என்று ஏளனம் செய்த பொன்முடியா? ரூ.1,000 திட்டத்தை கொச்சையாக பேசிய துரைமுருகனா? சென்னை மாநகராட்சியை அழித்து அட்டூழியம் செய்யும் சேகர் பாபுவா? பத்திரப்பதிவு ஊழல் செய்யும் மூர்த்தியா? இவர்கள் யாருக்கும் துறையை பற்றி தெரியாது" என்று தவெக துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மதுரை மாநாட்டில் பேசினார்.

2025-08-21 10:44 GMT

மதுரை பாரபத்தியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

2025-08-21 10:43 GMT

தமிழக வெற்றிக்கழக மாநாட்டு திடலில் 40 அடி கொடி கம்பத்தில் அக்கட்சியின் கொடியை ஏற்றினார் விஜய்.

Tags:    

Similar News