தமிழ்நாடு செய்திகள்

மதுபான கடையில் குவியும் த.வெ.க. தொண்டர்கள்

Published On 2025-08-21 15:04 IST   |   Update On 2025-08-21 15:04:00 IST
  • த.வெ.க.வின் 2வது மாநாட்டில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதல் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
  • ஆவியூர் மதுபான கடையில் தவெக தொண்டர்கள் அலைமோதி வருகின்றனர்.

த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன.

த.வெ.க.வின் 2வது மாநாட்டில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதல் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

மதுரையில் 106 டிகிரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும், த.வெ.க.வின் தொண்டர்கள் வருகை தருகின்றனர்.

இதற்கிடையே, தவெக மாநாடு நடைபெறும் பாரபத்தியை அடுத்த ஆவியூர் மதுபான கடையில் தவெக தொண்டர்கள் அலைமோதி வருகின்றனர்.

இதேபோல், மாநாடு திடலுக்கு அருகில் தவெக தொண்டர்கள் சிலர் கையில் மது பாட்டிலுடன் குடித்துக் கொண்டிருந்தனர். இது, டிரோன் கேமராவில் பதிவாவதை கண்ட தொண்டர்கள் அங்கிருந்து கலைந்தனர்.

Tags:    

Similar News