தூய்மை பணியாளர்களுக்கு உணவுத் திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- தூய்மை பணியாளர்களுக்கு உணவுத் திட்டம்.
- தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்கள்.
சென்னை கலைவாணர் அரங்கில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவுத் திட்டம், குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தூய்மை பணியாளர்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவை முதலமைச்சர் ருசி பார்த்து நன்றாக இருப்பதாக அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தூய்மை பணியாளருக்கான வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
மேலும், பணியின்போது உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கான நிவாரணத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கினார்.
தூய்மை பணியாளர் குழந்தைகளின் உயர்கல்வி உதவித்தொகை, சுயதொழில் மானிய திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியின் 31,373 தூய்மை பணியாளர்களுக்கான இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.64,73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.