கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு.. அரசுக்கு நன்றி - கார்த்தி
- எது கை கொடுக்கவில்லை என்றாலும் படிப்பு கை கொடுக்கும்
- நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப் வழங்கும் 'உலகம் உங்கள் கையில்' நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கல்வி நிர்வாகிகள், மணிகண்டன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள், இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை என பலர் கலந்துகொண்டனர்
இவ்விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, ""ஒரு மாணவன் நன்றாக படிக்கிறான் என்றால் சொத்தை விற்றாவது படிக்க வைக்க வேண்டும் என கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு. சினிமாவிற்கு செல்கிறேன் என அப்பாவிடம் சொன்னபோது, 'எது கை கொடுக்கவில்லை என்றாலும் படிப்பு கை கொடுக்கும். எனவே படி' என்றார்.
அதன் பிறகு என்ஜினியரிங்கும் மாஸ்டர்ஸ்-உம் படித்தேன். கல்விதான் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு உதவுகிறது.
விஷயங்கள் தெரிந்துகொள்வதற்கு கல்வியே உதவும். நான் அமெரிக்கா சென்று படிக்கும் பொழுது, அரசு பள்ளியில் படித்தவர்கள் தான் அங்கு பெரிய பொறுப்பில் இருந்தார்கள்.
நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம். ஏஐ வளர்ச்சி அடையும் கட்டத்தில் அரசு மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்குவது மிக முக்கியமான அம்சம்.
இதை செய்த அரசுக்கு நன்றி. ஏஐ மூலம் வேலை பறிபோகும் என்கின்றனர். ஆனால் தொழில் முனைவோர் பலர், இந்தியாவில் இது வளர்ச்சியை தரும் என கூறுகின்றனர்" என்றார்" என தெரிவித்தார்.