தமிழ்நாடு செய்திகள்

அமித் ஷா - அன்புமணி சந்திப்பு குறித்து இதுவரை திட்டம் இல்லை! - தி.மு.க.-வுக்கு 'ஷா' என்றாலே பயம் : நயினார் நாகேந்திரன்

Published On 2025-06-06 12:20 IST   |   Update On 2025-06-06 12:36:00 IST
  • ராமதாஸ்- அன்புமணி பேச்சுவார்த்தையில் பா.ஜ.க.வுக்கு சம்பந்தமில்லை.
  • தே.மு.தி.க.வும் எங்கள் கூட்டணியில் இணையும் என நம்பிக்கை உண்டு.

மதுரை:

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* இரண்டு நாட்கள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வருகிறார். மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் அமித் ஷா, அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகளை சந்திக்கிறார்.

* அமித்ஷா- அன்புமணி சந்திப்பு குறித்து இதுவரை திட்டம் இல்லை.

* ராமதாஸ்- அன்புமணி பேச்சுவார்த்தையில் பா.ஜ.க.வுக்கு சம்பந்தமில்லை.

* குருமூர்த்தி நாட்டில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என முயல்கிறார். அவர் ஒரு நலம்விரும்பி.

* தே.மு.தி.க.வும் எங்கள் கூட்டணியில் இணையும் என நம்பிக்கை உண்டு.

* மதுரையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்க மாட்டார்கள்.

* திமுகவிற்கு ஷா என்றாலே பயம் என்றார். 

Tags:    

Similar News