விஜய் கட்சியுடன் கூட்டணியா? - நயினார் நாகேந்திரன் பதில்
- 10 ரூபாய் வசூல் தொடர்பாக விமர்சனம் செய்தபோதே செருப்புகள் வீசப்பட்டது.
- நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும்.
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசியலில் த.வெ.க. கட்சி கரூர் சம்பவத்திற்கு பிறகு காணாமல் போன நிலையில் உள்ளதைப்போல் கேட்கிறீர்கள். கரூர் சம்பவத்திற்கான காரணத்தைத்தான் பார்க்க வேண்டும். அந்த நிகழ்வில், அந்த கட்சி தலைவர் விஜய்யின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும். அவர் 10 ரூபாய் வசூல் தொடர்பாக விமர்சனம் செய்தபோதே செருப்புகள் வீசப்பட்டது. எனவே அவருடைய பாதுகாப்பு குறித்தும் நாம் யோசிக்க வேண்டும்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று கேட்கிறீர்கள். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் உள்ளோம். நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும்' என்று தெரிவித்தார்.
மேலும், அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணைய வாய்ப்புள்ளதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு அதுபற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து, விஜய் உங்களுடைய கூட்டணிக்கு வந்தால் இணைத்துக் கொள்வீர்களா? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, சிரித்துக் கொண்டே 'பார்ப்போம்' என்று பதிலளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.